ARTICLE AD BOX

Dragon movie: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதற்கு முன் சில குறும்படங்களை இயக்கினார். அந்த குறும்படங்களை புரமோட் கூட செய்ய முடியாமல் டிவிட்டரில் பிரேம்ஜி உள்ளிட்ட பலரிடமும் வாய்ப்பு கேட்டார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. சினிமாவில் படம் இயக்க ஆசைப்பட்டு பலரிடமும் கதை சொன்னார்.
கோமாளி உருவான கதை: ஆனால், பிரதீப்புக்கு சினிமா அனுபவம் இல்லாததால் யாரும் அவரை நம்பவில்லை. ஜெயம்ரவியிடம் கதை சொல்லி ஒரு காட்சியையும் எடுத்து காட்டிய பின்னரே பிரதீப்பை ஜெயம் ரவி நம்பினார். அப்படி உருவான கோமாளி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

லவ்டுடே வசூல்: அதன்பின் லவ் டுடே என்கிற படத்தை இயக்கி நடித்தார். இப்போதுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் காதலை எப்படி கையாளுகிறார்கள் என காட்டியிருந்தார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. 10 கோடி செலவில் வெளியான இந்த படம் 100 கோடி வரை வசூல் செய்தது.
அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் ஆகிய படங்களில் நடிக்க துவங்கினார். இதில் டிராகன் படம் முடிந்து வருகிற 21ம் தேதியான நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
டிராகன்: டிரெய்லரில் வரும் காட்சிகள் டான் படத்தை நியாபகத்தினாலும் இது அந்த படம் போல் இருக்காது என சொல்லி இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. டிராகன் படத்தில் சிம்பு ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். இந்த பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் டிராகன் பிளாக்பஸ்டர் என பதிவிட்டுள்ளார்.

சிம்பு: எனவே, சிம்பு ரசிகர்களும் டிராகன் படத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கொடுத்த பேட்டிகளும் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, டிராகன் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.