டிராகன் படத்தின் வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பாளர் அர்ச்சனா

2 days ago
ARTICLE AD BOX

டிராகன்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். கடந்த வாரம் வெளிவந்த இப்படம் வெற்றிகரமாக மூன்று நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

லவ் டுடே படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து ஏஜிஎஸ் எடுத்த இரண்டாவது திரைப்படமாகும் டிராகன். லவ் டுடே எப்படி உலகளவில் ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்ததோ, அதே போல் இப்படமும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதே போல் தற்போது வசூல் வேட்டையில் டிராகன் படம் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், மூன்று நாட்களில் இப்படம் எந்தந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

வசூல் விவரம்

இதில் தமிழ்நாட்டில் ரூ. 24.9 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் கேரளா, கர்நாடாகா, வட மாநிலங்களில் ரூ. 4.37 கோடி வசூல் செய்துள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 6.25 கோடி வசூலையும், வெளிநாட்டில் ரூ. 14.7 கோடி வசூலையும் இப்படம் ஈட்டியுள்ளது.

இதன்மூலம் உலகளவில் ரூ. 50.22 கோடி வசூல் டிராகன் படம் மூன்று நாட்களில் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

Read Entire Article