ARTICLE AD BOX

டிராகன்’ பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவை நேரில் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த மாதம் 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலிலும் ரூ.100 கோடியை கடந்துள்ளது.
Rajini sir : what a writing Ashwath ! Fantastic fantastic !!🥹🥹
nalla padam pannanum, padatha pathutu Rajini sir veetuku kooptu wish panni namma padatha pathi pesanum !! Ithu director aganum nu kasta patu ozhaikra ovoru assistant director oda Kanavu ! Kanavu neraveriya nal… pic.twitter.com/IFuHhNkqjY
இந்த நிலையில் இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதனை அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்ன ஒரு ரைட்டிங் அஷ்வத், ஃபென்டாஸ்டிக்...ஃபென்டாஸ்டிக்...” என ரஜினி பாராட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், “நல்ல படம் பண்ணனும், படத்த பாத்துட்டு ரஜினி சார் வீட்டுக்கு கூப்புட்டு வாழ்த்தி நம்ம படத்த பத்தி பேசணும். இது டைரக்டர் ஆகுணும்னு கஷ்டப் பட்டு உழைக்கிற ஒவ்வொரு அசிஸ்டண்ட் டைரக்டரோட கனவு . கனவு நிறைவேறிய நாள் இன்று” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.