ARTICLE AD BOX
அஜித்தின் விடாமுயற்சி உள்பட இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்னென்ன புதுப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகிறது என்பதன் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான டிராகன் திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருவதால், அப்படம் தியேட்டர்களை எல்லாம் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் இந்த வாரம், தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. 3 படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் நிலையில், அதைவிட அதிகப்படியான படங்கள் வருகிற பிப்ரவரி 28ந் தேதி ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் பிரம்மா இயக்கிய வெப் தொடர் தான் சுழல். இந்த தொடரின் முதல் சீசன் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் சீசனை தற்போது எடுத்துள்ளனர். கிரைம் திரில்லர் தொடரான இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், மோனிஷா, கெளரி கிஷான், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த வெப் தொடர் வருகிற பிப்ரவரி 28ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

எழில் பெரியாவெடி இயக்கிய பராரி திரைப்படமும் இந்த வாரம் ஓடிடிக்கு வருகிறது. இந்த படத்தில் ஹரிஷங்கர், சங்கீதா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இப்படத்தை வருகிற பிப்ரவரி 28ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Suzhal 2 : நெக்ஸ்ட் சம்பவம் லோடிங்; அதகளமாக ரிலீஸ் ஆன சுழல் 2 டிரைலர்

குரு கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பிளட் அண்ட் பிளாக். இப்படத்திற்கு மோகன் சந்திரா இசையமைத்துள்ளார். நரமாமிசம் சாப்பிடும் திரைப்படம் தமிழ் திரைத்துறையில் பார்ப்பது மிக அரிது. இந்த திரைப்படம் பார்ப்பவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். இப்படத்தை வருகிற பிப்ரவரி 28ந் தேதி முதல் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

பிரதீஷ் உத்தமன் இயக்கிய மலையாள படம் தான் பியாண்டு தி 7 சீஸ். இப்படத்தில் அதிரா பட்டேல், பிரசாந்த் நாயர், சாவித்ரி ஸ்ரீதரன், கெளரி கோபன் ஆகியோர் நடித்துள்ளனர். இது ஒரு அட்வெஞ்சர் நிறைந்த திகில் திரைப்படம். இப்படம் வருகிற பிப்ரவரி 28ந் தேதி சிம்ப்ளி செளத் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ந் தேதி திரைக்கு வந்த படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. திரையரங்குகளில் படு தோல்வியை சந்தித்த விடாமுயற்சி திரைப்படம் தற்போது ஓடிடிக்கு பார்சல் செய்து அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 3ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விடாமுயற்சி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... ரிலீசாகி 28 நாட்களுக்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி