ARTICLE AD BOX
மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காசநோய் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் (ICMR-NIRT) பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில், உதவியாளர் (Assistant), மேல் பிரிவு எழுத்தர் (Upper Division Clerk), கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk) ஆகிய பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளது.
என்னென்ன வேலைகள்?
- உதவியாளர் (Assistant): குரூப்-பி (Group-B) பிரிவில் உள்ள இந்த பணிக்கு, 7-வது ஊதியக்குழுவின் படி, ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். மொத்தம் 5 பணியிடங்கள் உள்ளன. இதில், 4 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும் (UR), 1 இடம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (OBC) ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 முதல் 30 வரை.
- மேல் பிரிவு எழுத்தர் (Upper Division Clerk): குரூப்-சி (Group-C) பிரிவில் உள்ள இந்த பணிக்கு, 7-வது ஊதியக்குழுவின் படி, ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். மொத்தம் 1 பணியிடம் உள்ளது. இது பொதுப் பிரிவினருக்கு (UR) ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 முதல் 27 வரை.
- கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk): குரூப்-சி (Group-C) பிரிவில் உள்ள இந்த பணிக்கு, 7-வது ஊதியக்குழுவின் படி, ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். மொத்தம் 10 பணியிடங்கள் உள்ளன. இதில், 6 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும் (UR), 2 இடங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (OBC), 1 இடம் பட்டியல் சாதியினருக்கும் (SC), 1 இடம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் (EWS) ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 முதல் 27 வரை.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்,
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) அதிகாரப்பூர்வ இணையதளமான https://icmr.gov.in NIRT இணையதளம்: https://nirt.res.in