ARTICLE AD BOX
Published : 20 Mar 2025 04:29 AM
Last Updated : 20 Mar 2025 04:29 AM
டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 217 பேருக்கு பணி ஆணை: அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வழங்கினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 186 நேரடி நியமன இளநிலை உதவியாளர்களுக்கு கடந்த மார்ச் 15-ம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடத்தப்பட்டது. அக்கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான பணியிடங்களை தேர்வு செய்த 186 பேர் , பொது நூலகத்துறைக்கு தெர்வு செய்யப்பட்ட 24 பேர் , தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 7 பேர் என மொத்தம் 217 பேருக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அரசு செயலர் எஸ்.ஜெயந்தி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு பொது நூலகத் துறை இயக்குநர் பொ.சங்கர், பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலர் பெ.குப்புசாமி, இணை இயக்குநர் த.ராஜேந்திரன், சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: தனியார் வங்கிக்கு அபராதம் - மேலாளருக்கு 3 மாதம் சிறை
- டாஸ்மாக் மதுபானக் கடைகளில் முதல்வர் படத்துடன் கூடிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டிய பாஜக மகளிரணியினர்
- பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சுற்றுலா வழிகாட்டி கைது
- ஈரோடு அருகே கார் விபத்தை ஏற்படுத்தி சேலத்தை சேர்ந்த ரவுடி படுகொலை: 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்