டி ராஜேந்திரன் தான் எனக்கு கடவுள்.. வேற யாரும் அந்த உதவி செய்யல! நடிகர் ராதாரவி எமோஷனல்

20 hours ago
ARTICLE AD BOX

டி ராஜேந்திரன் தான் எனக்கு கடவுள்.. வேற யாரும் அந்த உதவி செய்யல! நடிகர் ராதாரவி எமோஷனல்

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு கச்சிதமாக பொருத்தமாகும் நடிகர் என்றால் ராதா ரவி என்று சொல்லும் அளவிற்கு பல வருடங்களாக அண்ணன், தம்பி, காமெடி கேரக்டர், வில்லன் என்று எல்லா கேரக்டரிலும் நடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார். ராதாரவி பேட்டி ஒன்றில், சினிமாவில் ஆரம்பத்தில் வரும்போது தனக்காக யாரும் செய்யாத உதவியை டி ராஜேந்திரன் தான் செய்தார். அவர் தான் எனக்கு கடவுள் என்று நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.

சினிமா துறையில் இருக்கும் ஒரு சிலர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோல தங்கள் மனதில் நினைப்பதே அப்படியே பேசி விடுவார்கள். அதனால் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டிருப்பார்கள் அதில் ஒருவர் தான் ராதாரவி. ராதாரவி நடிகர் எம் ஆர் ராதாவின் மகன், ராதிகா, நிரோஷாவின் சகோதரர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அப்பா மாதிரியே பல இடங்களில் நக்கல் நையாண்டி கலாய்ப்புகளில் கில்லியாக பேசிக் கொண்டிருப்பார்.

T Rajendran Radha Ravi

அப்பாவைப் போல பிள்ளை

அவருக்கும் அவருடைய அப்பாவிற்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் ரியல் லைப்பில் இருவரும் வெவ்வேறு சிந்தனை கொண்டவர்கள் என்று பல இடங்களில் ராதாரவி பேசி இருக்கிறார். ராதாரவிக்கும் தன்னுடைய அப்பா போல நாடகத்துறை தான் ஆரம்பம். சின்ன வயசிலிருந்து நிறைய நாடகங்களில் நடித்திருந்தாலும் அதைத்தான் இப்போது வரைக்கும் சினிமாவில் பயன்படுத்தி கொண்டு வருவதாக ராதா ரவி பேசியிருக்கிறார்.


முதல் அறிமுகம்

அதுபோல ராதாரவியை சினிமாவில் அறிமுகப்படுத்தியது கே பாலச்சந்தர் தான். அவரை ரெகமெண்ட் செய்தது கமல்ஹாசன். 1976 ஆம் ஆண்டு வெளிவந்த மன்மத லீலை என்ற படத்தில் சின்ன ரோலில் அந்த படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு ரகடு பாயாக புல்லட்டில் காதலியோடு சுற்றிக் கொண்டிருப்பார். அந்த படத்தில் அவருக்கு பெரிய அளவில் அவருக்குமுக்கியத்துவம் இல்லை என்றாலும் அதற்கு பிறகு வெளியான வைதேகி காத்திருந்தால் படத்தில் யார் இவர் என்று எல்லோரையும் வியக்க வைக்கும் வகையில் அதிரடி காட்டி இருந்தார்.

நான் மாடர்ன் உடை போட காரணமே இதுதான்! இது தெரியாம பேசுறாங்க! சிவாங்கி விளக்கம்
நான் மாடர்ன் உடை போட காரணமே இதுதான்! இது தெரியாம பேசுறாங்க! சிவாங்கி விளக்கம்

வெள்ளிக்கிழமை ராமசாமி

அதிலும் வெள்ளிக்கிழமை ராமசாமினு அவருடைய அறிமுகம் காட்சியே பெரிய அளவில் மிரட்டலாக இருக்கும். மாமுல் வாங்கும் ரவுடியாக இருந்தாலும் பாசக்கார அண்ணனாகவும் நடித்திருப்பார். அதற்கு பிறகு ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய தனித்துவத்தையும், பாடி லாங்குவேஜ்யும் வித்தியாசமாக காட்டிக் கொண்டிருக்கும் ராதா ரவி முன்னணி நடிகர்கள் எல்லோரோடும் சேர்ந்து நடித்து விட்டார்.

கடைசி வரை நடிப்பு

ரஜினி தொடங்கி இப்போதுள்ள நடிகர்களோடும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். தான் சாகுற வரைக்கும் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று பேட்டிகளில் பேசியிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார்.

T Rajendran Radha Ravi
திருச்செல்வம் என்கிட்ட நேரடியா அப்படி கேட்டாரு! இதை எதிர்பார்க்கல! சிறகடிக்க ஆசை மீனா மகிழ்ச்சி
திருச்செல்வம் என்கிட்ட நேரடியா அப்படி கேட்டாரு! இதை எதிர்பார்க்கல! சிறகடிக்க ஆசை மீனா மகிழ்ச்சி

ராதாரவி வருத்தம்

அதில், நான் எம்ஆர் ராதா மகன் என்றதும் எனக்கு யாரும் வந்ததும் வாய்ப்பு தந்து விடல. ஆரம்பத்தில் சின்ன சின்ன காட்சிகள், அரை மணி நேரம் ஒரு மணி நேரம் நடிக்க வேண்டிய காட்சிகள் என்று ஒரு சீன் ரெண்டு சீன் நடித்து ரொம்ப கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் தான் எனக்கு கடவுள் மாதிரி டி ராஜேந்தர் வந்தாரு. அவர்தான் என்னை வெளியே கொண்டு வந்தார்.

டி ராஜேந்திரன் செய்த உதவி

நெகட்டிவ் சைடுனாலும் சரி, பாஸிட்டிவ் சைடு எதுவா இருந்தாலும் அவர்தான் என்னை வெளியே கொண்டு வந்தார் என்று சொல்லுவேன். உயிர் உள்ளவரை உஷா படத்தில் வில்லன் கேரக்டரை கொடுத்து என்னை சினிமாவில் மேலே தூக்கி விட்டது டி ராஜேந்திரன் தான். சினிமா துறையில் எத்தனையோ இயக்குனர்களை பார்த்திருந்தாலும் டி ராஜேந்திரன் போல ஒரு மனிதனை பார்க்க முடியாது. அவர் வித்தியாசமான நபர் என்று உருக்கமாக ராதாரவி பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
English summary
Radha Ravi has been playing all the characters in all the character, brother, comedy character, villain, for many years. In a Radha Ravi interview, T.Rajendran did the help of anyone who did not do for himself when he came to the cinema. He is the one who is the God of God.
Read Entire Article