டாஸ்மாக் ஊழல் விவகாரம்… எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை… அமைச்சர் ரகுபதி பேட்டி…!!

5 hours ago
ARTICLE AD BOX

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி செய்யும் ஆலை  சார்ந்த அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ரூ.ஆயிரம் கோடி டாஸ்மாக் முறைகேடு தொடர்பான முறைகேடுக்கு ஆதாரம் உள்ளதா?. எதையும் சந்திக்க தயார் என்று செந்தில் பாலாஜி தெளிவாக தெரிவித்துள்ளார். முதல்வருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஊழலே நடைபெறவில்லை. இதில் முதல்வரை சிக்க வைக்க முடியாது. எங்கள் மடியில் கனமில்லை அதனால் வழியில் பயம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Read Entire Article