ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.தமிழ்பண்பாடும் சிவனும்!
பாரதநாட்டில் ஆன்மீகம் என்பது தமிழ் பண்பாட்டை குறிப்பிடாமல் நிறைவு பெறாது. தமிழ் பண்பாட்டில் சிவபெருமானுக்கு என்று தனி வழிபாடும், இடமும் உள்ளது என ஈஷா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு.
2.கோவையில் போலீசார் சோதனை
போதை பொருள் புழக்கம் உள்ளிட்டவை குறித்து கோவை சரவணம்பட்டி அருகே 12 ஆண்கள் தங்கும் விடுதிகளில் 30க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
3.தமிழக மீனவர்கள் வருகை
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள், இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க:- மும்மொழிக் கொள்கை: "What Bro…! It’s Very Wrong Bro….!" பாஜக, திமுகவை விளாசிய விஜய்!
4.காலாவதியான நேரத்தில் அரசியல்
சினிமாவில் காலாவதியான நேரத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரம் பெறுகின்றனர். சினிமாவில் நன்றாக சம்பாதித்துவிட்டு சொகுசாக வாழ்ந்து அரசியலுக்கு வருகிறார்கள். நான் 35 ஆண்டுகள் உழைத்த பிறகே விசிக அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறி இருக்கிறது. அரசியலுக்கு வரும் நடிகர்கள் ஊர் ஊராய் செல்லத் தேவையில்லை என்ற சொகுசு இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்.
5.திமுக, பாஜக மீது விஜய் விமர்சனம்
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் எல்கேஜி, யுகேஜி சிறுவர்களை போல் திமுகவும், பாஜகவும் அடித்துக் கொள்வதாக தவெக தலைவர் விஜய் விமர்சனம்.
6.விஜய்க்கு அண்ணாமலை கேள்வி
விஜய் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது. உங்கள் குழந்தைக்கு மூன்று மொழி, தவெக தொண்டர்களின் குழந்தைகளுக்கு 2 மொழியா என்று பாஜக மாநிலத் தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் படிக்க:- சீமான் vs விஜயலட்சுமி: சீமானுக்கு எதிரான கருக்கலைப்பு வழக்கு! முக்கிய ஆதாரத்தை நடிகை விஜயலட்சுமி தந்ததாக தகவல்
7.விஜய் மீது சிபிஎம் விமர்சனம்
வசனம் பேசுவதில் வல்லவரான தவெக தலைவர் விஜய், ஒன்றிய அரசு குறித்து பேசும் போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்? பாசிசம் - பாயாசம் என்று நக்கலடிப்பதை பார்த்தால் இரண்டு குறித்தும் அவருக்கு ஏதும் தெரியாது என்றே கருத வேண்டி உள்ளது. என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம்.
8.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
9.பாஜகவுக்கு ஆ.ராசா கேள்வி
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தெளிவான பதிலை அமித்ஷா கூறவில்லை. மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு கூடுதல் எம்.பி.சீட்டுக்கள் கிடைக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு தொகுதி குறைப்பு என்ற தண்டனையா என திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி.
10.கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே, பாத்திரக்கடை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் மதிப்புள்ள கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.
