ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம்.. போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு!

23 hours ago
ARTICLE AD BOX

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம்.. போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு!

Chennai
lekhaka-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மனு குறித்து 4 வாரங்களில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசேகரனின் தாய் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், தனது மகன் ஞானசேகரனை கடந்த டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொடர்பான வழக்கில் காவல்துறையினர் கைது செய்ததாகவும் அதன் பிறகு ஜனவரி 5ஆம் தேதி தனது மகன் ஞானசேகரன் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Anna university police gnanasekaran

தனது மகன் மீதான பாலியல் வழக்கு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ள நேரத்தில் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பழைய வழக்குகளை காரணம் காட்டி காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்துள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த தார் ஜீப்பில் போய்தான் அட்டூழியம் பண்ணாராம்.. சர்வீஸ் சென்டரில் நின்ற ஞானசேகரனின் கார் பறிமுதல்
இந்த தார் ஜீப்பில் போய்தான் அட்டூழியம் பண்ணாராம்.. சர்வீஸ் சென்டரில் நின்ற ஞானசேகரனின் கார் பறிமுதல்

இந்த விவகாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க கூடிய எந்த விதிமுறைகளையும் மாநகர காவல் துறையினர் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக தனது மகன் மீது வேண்டும் என்றே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே சட்ட விரோத காவலில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுவிப்பதுடன் தனது மகன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து நான்கு வாரங்களில் காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
English summary
Madras High Court has ordered the police to respond within 4 weeks to the petition filed by the mother of Gnanasekaran, who was arrested in the rape case of a student of Anna University, Chennai, against the order to remand him under the Prevention of Goondas Act.
Read Entire Article