ARTICLE AD BOX
ஜோதிகா யாருடன் ஜோரா ஹோலி கொண்டாடியிருக்காரு பாருங்க.. மும்பைக்கு போய் செம ஃபன் பண்றாரே!
மும்பை: பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றனர். கோலிவுட்டிலும் யாஷிகா ஆனந்த், தர்ஷா குப்தா, சாக்ஷி அகர்வால் போன்ற பிக் பாஸ் பிரபலங்கள் ஹோலி பண்டிகையை கவர்ச்சி பொங்க கொண்டாடியுள்ளனர். இந்நிலையில், நடிகை ஜோதிகா தனது குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு நடிகை ஜோதிகா அளித்து வரும் பேட்டிகள் அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன. ஜோதிகா மற்றும் சூர்யா குடும்பத்துடன் மும்பைக்கு குடியேறியதில் இருந்து தமிழ் சினிமாவில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் அவர்கள் பெரிதாக கண்டு கொள்ளாமல் தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான டப்பா கார்ட்டல் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்தடுத்து இந்தி படங்களில் நடித்து வரும் ஜோதிகா தெனிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிக அளவில் இருப்பதாகவும் இயக்குனர்கள் பெண்களுக்கான கதைகளை உருவாக்குவதில்லை என்றும் குறை கூறியிருந்தார். ஹோலி பண்டிகை முன்னிட்டு தனது அம்மா வீட்டில் குடும்பத்துடன் அவர் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
நக்மா வெளியிட்ட புகைப்படங்கள்: நடிகை ஜோதிகா ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடாத நிலையில், அவரது சகோதரியான நடிகை நக்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கை ஜோதிகாவுடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஜோதிகா உடம்பெல்லாம் கலர் பொடி: மும்பைக்கு சென்று குடும்பத்துடன் குடியேறியுள்ள நடிகை ஜோதிகா தனது அம்மா வீட்டுக்கு சென்று தனது பெற்றோர்களுடனும் தனது சகோதரி நக்மாவுடனும் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் ரசிகர்களின் பார்வையை கவர்ந்துள்ளது. நக்மா மற்றும் ஜோதிகா உடல் முழுவதும் கலர் பொடிகளை பூசிக்கொண்டு செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளனர்.
சூர்யா மற்றும் குழந்தைகள் காணோம்: ஜோதிகா நக்மாவுடன் ஓடி கொண்டாடிய நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் குழந்தைகளான தேவ் மற்றும் தியாவின் புகைப்படங்களை நக்மா வெளியிடவில்லை. ஹோலி கொண்டாட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லையா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தின் ரிலீசுக்காகவும் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்காகவும் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள வாடிவாசல் பணத்திற்காகவும் தன்னை தயார் படுத்தி வருவதாக கூறுகின்றனர்.
தமன்னா முதல் கத்ரீனா கைஃப் வரை: நேற்று நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஏகப்பட்ட பாலிவுட் நடிகைகள் கலந்து கொண்டனர். நடிகை தமன்னா விஜய் வர்மாவுடன் இணைந்து ரவீனா டாண்டன் நடத்திய ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன. கத்ரீனா கைஃப் தனது கணவருடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சோனா சின்ஹா, ஷெர்லின் சோப்ரா என ஏகப்பட்ட பாலிவுட் நடிகைகள் உடல் முழுவதும் கலர் பூசி கொண்டிருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஜோதிகா மற்றும் நக்மாவின் ஹோலி கொண்டாட்டத்தை பார்த்த ரசிகர்கள் இன்னமும் இருவரும் அழகு குறையாமல் அப்படியே இருக்கின்றனர் என்றும் இப்போதான் டிவியில் பாட்ஷா படம் பார்த்தோம் என்றும் நக்மாவின் போஸ்ட்டுக்கு கீழ் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.