ARTICLE AD BOX
ஜோதிகா 46 வயதில் இப்படியா?.. அந்த மாதிரி காட்சியில் நடிக்கிறாங்களே.. ரசிகர்கள் ஷாக்
மும்பை: சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா இடையில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார். அதனைத் தொடர்ந்து இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் அவர் ஹிந்தியில் தனது முழு கவனத்தையும் செலுத்திவருகிறார். அந்தவகையில் டப்பா கார்ட்டெல் என்கிற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். அந்த வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் நடித்திருக்கும் ஒரு காட்சி ரசிகர்களிடையே ஷாக்கை கொடுத்திருக்கிறது.
மும்பையை பூர்வீகமாகக் கொண்ட ஜோதிகா தமிழில் வாலி படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது திறமையை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தினார். இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே அவர் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றார். சிம்ரனின் ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அவருக்கு சரியான போட்டியாக விளங்கினார் ஜோதிகா.

பூவெல்லாம் கேட்டுப்பார்: இதற்கிடையே பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுடன் நடித்தபோது அவருக்கு காதல் ஏற்பட்டது. இரண்டு பேரின் காதலுக்கும் சூர்யாவின் வீட்டில் முதலில் பெர்மிஷன் கிடைக்கவில்லை. ஆனால் வீட்டு சம்மதத்துக்காக பல வருடங்கள் இரண்டு பேரும் காத்திருந்தார்கள். ஒருவழியாக சம்மதம் கிடைத்ததால் இரண்டு பேரின் திருமணமும் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படித்தான் வாழ வேண்டுமென எந்த அவசியமும் இல்லை.. விமர்சனங்களுக்கு ஜிவி பிரகாஷ் தரமான பதிலடி
நடிப்புக்கு ஓய்வு: திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்ட ஜோதிகா முழு ஹவுஸ் ஒய்ஃபாக மாறியதால் சினிமாவிலிருந்து விலகியிருக்க ஆரம்பித்தார். முழுக்க முழுக்க குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய அவர் சில வருடங்கள் கழித்து 36 வயதினிலே படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட்டாக தேர்ந்தெடுத்து நடித்தார். அப்படி அவர் நடித்த ராட்சசி, உடன் பிறப்பே என ஏராளமான படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன.
ஹிந்தியில் கவனம்: தமிழில் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ட்விஸ்ட்டாக ஹிந்தியில் அவரது முழு கவனமும் இருக்கிறது. ஸ்ரீகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; சூர்யாவையும் ஹிந்தியில் கவனம் செலுத்த வைத்திருக்கிறார். அதற்காக இரண்டு பேரும் தங்களது குழந்தைகளோடு மும்பையில் இப்போது செட்டில் ஆகியிருக்கிறார்கள். இதற்கிடையே ஜோதிகா இப்போது டப்பா கார்ட்டெல் என்கிற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.
விஜய் என் மகளிடம் பொறுமையாக இருந்தார்.. உண்மையில் கஷ்டம்.. நடிகையின் தாய் ஓபன் டாக்
அந்த மாதிரியான காட்சி: இந்நிலையில் அந்த வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுவருகிறது. சூழல் இப்படி இருக்க அந்த வெப் சீரிஸில் ஜோதிகா சிகரெட் பிடிக்கும்படி நடித்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி அட நம்ம ஜோதிகாவா இப்படி; இந்த வயதில் இப்படி ஒரு காட்சியில் நடித்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றன. மேலும் அந்தக் காட்சியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.