ஜெர்மனியில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை: ஜெர்மனி நாட்டில் பணிபுரிய செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்க்கு ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குட்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு பி1,பி2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாத சம்பளமாக சுமார் ரூ.2லட்சம் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 15ம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044- 22505886, 63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

The post ஜெர்மனியில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article