ஜெயிலர் 2-வில் கலக்கப் போகும் அந்த நடிகர்!.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்தான்!..

2 hours ago
ARTICLE AD BOX

Jailer2: சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். ரஜினியின் சில படங்கள் சரியாக போகாத நிலையில் இந்த படம் அவருக்கு கை கொடுத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படம் சரியாக போகவில்லை. எனவே, அதே நிறுவனத்திற்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்தார் ரஜினி.

ஜெயிலர் வசூல்: அப்படி உருவான ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்து 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபத்தையும் கொடுத்தது. அதில் சந்தோஷப்பட்ட கலாநிதிமாறன் ரஜினிக்கு ஒரு பெரும் தொகையை அன்பளிப்பாகவும், ஒரு விலை உயர்ந்த காரையும் பரிசாக கொடுத்தார். அதேபோல் நெல்சனுக்கு ஒரு காஸ்ட்லி காரை பரிசளித்தார்.


ஜெயிலர் கேமியோ: ஜெயிலர் படம் கேரளாவில் வசூலை அள்ள மோகன்லாலையும், கன்னடத்தில் ஹிட் அடிக்க சிவ்ராஜ்குமாரையும் கொண்டு வந்தார்கள். அவர்கள் இருவரும் கேமியோ வேடத்தில் கலக்கி இருந்தார்கள். எனவே, எல்லா மொழிகளிலும் இப்படம் வசூலை அள்ளியது. ஜெயிலர் ஹிட் என்பதால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் ஜெயிலர் 2-வில் அவர் நடிக்கவுள்ளார். ஜெயிலர் 2 படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டார் நெல்சன். யோகிபாபு உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கவுள்ளனர். அனிருத்தே இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஏனெனில், ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை ஒரு முக்கிய காரணமாக இருந்தது.


ஜெயிலர் 2-வில் சிவ்ராஜ்குமார்: ஜெயிலர் படத்தில் சிவ்ராஜ்குமார் நடித்தது போல இப்போது இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கிறாரா? இல்லையா? என்பது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது. ஏனெனில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பி வந்து ஓய்வு எடுத்து வருகிறார். எனவே, அவர் நடிக்கிறாரா என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், ஜெயிலர் 2-வில் சிவ்ராஜ்குமார் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஜூன் மாதம் முதல் அவர் கன்னட படங்களில் நடிக்கவிருப்பதால் மே மாதமே ஜெயிலர் 2-வில் அவர் நடிக்கும் காட்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டாராம். 15 நாட்கள் அவர் கால்ஷீட் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, ஜெயிலர் 2 மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

Read Entire Article