ARTICLE AD BOX

சென்னை,
கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'ஜெயிலர்'. இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் நெல்சன். சமீபத்தில் 'ஜெயிலர் 2' படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.
இதற்கிடையில் 'ஜெயிலர் 2' படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் எனவும் எஸ்.ஜே. சூர்யா அல்லது செம்பன் வினோத் ஜோஸ் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளது. சென்னையில் 15 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் பல்வேறு நடிகர்கள் பங்கேற்கிறார்கள்.