ARTICLE AD BOX
ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமாருக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்.. அப்படி பலரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தனது அசத்தலான ஸ்டைல் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், தனது 72 வயதில் தற்போதும் படம் நடித்து அசத்தி வருகிறார்.
அப்படி அவர் வாழ்க்கையில் சமீபத்தில் ஹிட் அடித்த படம் என்றால் ஜெயிலர் படம் தான். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த போதே யார் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை எழுந்தது. இப்படிப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில் வெளியான ஜெயிலர் படம் மாஸ் வெற்றி படைத்தது. இந்த படத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக அட்டகாசமான நடிப்பை ரஜினிகாந்த் வெளிப்படுத்தி இருந்தார். தந்தை மகனுக்கும் இருக்கும் உறவை அழகாக வெளிப்படுத்தியது இந்த படம். ரஜினிகாந்திற்கு மட்டுமல்ல இயக்குனர் நெல்சனுக்கும் இந்த படம் பெயர் வாங்கி கொடுத்தது என்றே சொல்லலாம். பீஸ்ட் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் கம்பேக்காக இருந்தது. இந்த திரைப்படம் 650 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன்லால், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக அமைந்த இந்த படம் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.
முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த பாகம் குறித்து அறிவிப்பும் வெளியானது. இதனால் ரசிகர்கள் அதை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இடம்பெற்ற காட்சிகள் மிக பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால் அவர் கேன்சர் பாதிப்பு காரணமாக இரண்டாவது பாகத்தில் நடிக்க முடியாத சூழலில் உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா ஜெயிலர் 2 திரைப்படத்தில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலையாவிற்கு தமிழ். தெலுங்குவில் அதிக ரசிகர்கள் கூட்டம் இருப்பதால், படத்தின் எதிர்பார்ப்பு சற்று அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.