ARTICLE AD BOX

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மதியத்திற்கு மேல் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் ஜெயலலிதா பிறந்தநாளில் நினைவு கூர்வதாக தமிழில் பதிவிட்டுள்ளார்.
”ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர்.” என்று கூறியுள்ள பிரதமர் மோடி ஜெயலலிதாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
இதே பிரதமர் மோடி தான் 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒரு தடவை கூட நேரில் வந்து நலம் விசாரிக்காதவர் என்பதை அதிமுகவினர் மறந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மோடியா? இந்த லேடியா? என்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று கேள்வி கேட்ட அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டு மக்கள் பெருவாரியான வெற்றியைத் தந்ததையும் மறந்திருப்பார்களா என்ன?