ஜெயம் ரவியை அடுத்து பெயர் மாற்றிய இன்னொரு தமிழ் ஹீரோ.. புதிய பெயர் என்ன தெரியுமா?

1 day ago
ARTICLE AD BOX

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது பெயரை "ரவி மோகன்" என்று மாற்றிய நிலையில், இன்னொரு தமிழ் ஹீரோ தனது பெயரை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் "நவரச நாயகன்" என்று போற்றப்பட்டவர் நடிகர் கார்த்திக் என்பதும், அவரது மகன் கௌதம் கார்த்திக் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்த விஷயமே. மணிரத்னம் இயக்கிய "கடல்" என்ற திரைப்படத்தில் அறிமுகமான அவர், அதன் பின்னர் சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, "மிஸ்டர் எக்ஸ்" என்ற திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து கெளதம் கார்த்திக் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்த நிலையில், தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் போஸ்டரில், கௌதம் கார்த்திக்கின் பெயர் "கௌதம் ராம் கார்த்திக்" என்று மாற்றப்பட்டுள்ளதை காணலாம். இதன் மூலம், அவர் தனது பெயரை மாற்றி உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

"மிஸ்டர் எக்ஸ்" படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து சரத்குமார், கௌதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.

The game begins 🔥🔥🔥#MrX - Teaser from TODAY.

Produced by @lakku76 #Maverik
Co-produced by @venkatavmedia @Prince_Pictures @realsarathkumar @Gautham_Karthik @ManjuWarrier4 @itsmanuanand @AnaghaOfficial @raizawilson @athulyaofficial @dhibuofficial @vincentcinemapic.twitter.com/Nl7deLMpEF

— Arya (@arya_offl) February 22, 2025
Read Entire Article