ARTICLE AD BOX

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் கரியாவட்டம் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ராகிங் என்ற பெயரில் கொடூரமாக சித்திரவதை செய்த 7 மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. SFI மாணவர் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அலன், வேலு, சல்மான், ஸ்வரன், ஆனந்த், பார்த்தன் மற்றும் பிரின்ஸ் ஆகிய மாணவர்களுக்கு எதிராக ரேகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இவர்கள் 7 பேரும் சேர்ந்து முதலாமாண்டு மாணவரான அபிஷேக்கை ராகிங் செய்து தாக்கியுள்ளனர். இதனால் அபிஷேக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஜனவரி 11ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் இவர்கள் 7 பேரையும் அதிகாரப்பூர்வமாக தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளது.
இதனால் இந்த 7 மூத்த மாணவர்களும் அபிஷேக்கை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் தக்க சமயத்தில் அபிஷேக் தப்பிவிட அவரது நண்பரான பின்ஸ் மாட்டியுள்ளார். அதாவது பின்ஸ் அவரது தந்தை ஜோஸ் உடன் பேட்மிட்டன் பயிற்சிக்காக கல்லூரி வளாகத்திற்கு வந்துள்ளார். அப்போது 7 மூத்த மாணவர்களும் பின்ஸை பார்த்ததும் அவரை கடத்தி தூக்கிச் சென்று SFI யூனிட் அறைக்குள் இழுத்துச் சென்றுள்ளனர். அந்த அறைக்குள் வைத்து முழங்கால் போட்டு நிலையாக நிற்கவில்லை எனில் கிரிக்கெட் ஸ்டம்ப் கொண்டு அடிப்பதாகவும் மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து கையில் கிடைத்தவற்றையெல்லாம் கொண்டு தாக்கியுள்ளனர். அவரின் சட்டையை கிழித்து அரை நிர்வாணமாக வெளியே செல்லுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்த கல்லூரியின் ராகிங் தடுப்பு குழு விசாரணை மேற்கொண்டது. இதனை அடுத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் மாணவர்களின் வாக்குமூலங்களை ஆய்வு செய்த பின்பு பின்ஸ் மீது ராகிங் வன்கொடுமை நடந்துள்ளது உறுதியானது. கல்லூரி முதல்வர் காவல்துறையிடம் தகவல்களை வழங்கியதை அடுத்து மூத்த மாணவர்கள் 7 பேர் மீதும் கூடுதல் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். பீன்ஸ் படுகாயம் அடைந்ததால் அவரை நெடுமங்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் ராகிங் சம்பவமாக இருக்கலாம் என மருத்துவர் உறுதிப்படுத்தி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து காவல்துறையினர் மருத்துவனைக்கு சென்று பின்ஸின் வாக்குமூலத்தையும் பதிவு செய்து மூத்த மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.