ARTICLE AD BOX
ஜீ தமிழில் பிரபலமான சீரியலில் இருந்து விலகிய நடிகை.. அடுத்த பயணத்திற்கு ரெடியான ஜனனி!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல அண்ணா, கார்த்திகை தீபம், மனசெல்லாம், ராமன் தேடிய சீதை போன்ற சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்த ஒன்றாக இருக்கிறது. இதை தாண்டி இதயம் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. பலரின் இதயங்களை கவர்ந்த இந்த சீரியலில் இருந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஒருவர் விலகுவதாக அறிவித்துள்ளார். இதை கேட்டு ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர் அவருக்கு பதில் வேறு யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைத்துள்ளது. மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று பார்ப்பவர்களை அடிமையாக்கி விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த நாடகத்தில் இருக்கும் கதைகள் ரொம்பவே எதார்த்தமாகவும், பார்ப்பதற்கு உணர்வுபூர்வமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. கடந்த ஆகஸ்ட் 2023ல் ஒளிபரப்பான இதயம் சீரியல் 650 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. 2 சீசன்களாக வேறு ஒளிபரப்பாகிறது.
ஆதி - பாரதி: இதயம் சீரியலில் ஹீரோவான ஆதியின் எதார்த்தமான நடிப்பும், பாரதி மீது ஆதியின் காதலும் மக்களை கவர்ந்துள்ளது. அதேபோன்று ஆண்டாள் - அழகர் காதல் பார்க்க காமெடியாக கலகலப்பாக வெளியாகி விறுவிறுப்பான காட்சிகளுடன் மெய்சிலிர்க்க வைக்கிறது என்றே ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ஆதிக்கு பாரதி பெயரை கேட்டாலே கோபம் தான் வருகிறது. எப்படியாவது ஆதி தனது மகளை ஏற்றுக்கொள்வாரா, பாரதியை கை பிடிப்பாரா என்று நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
வில்லன்: ஆண்டாளின் தந்தை ஒரு பக்கம் அரசியல் பின்னணியுடன் செய்யம் சூழ்ச்சியும் காமெடி காட்சிகளும் ரசிக்க வைக்கின்றனர். ஆண்டாள் - அழகரையும் பிரிக்க முடியுமா தெய்வீக காதலுக்கே அப்படின்னா.. சீரியலில் அது நடக்குமா என பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ஜீ தமிழில் புதிய மாற்றமும் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

நேரம் மாற்றம்: ஜீ தமிழில் மதியவேளையில் மனசெல்லாம், இரவு வேளையில் கெட்டிமேளம் போன்ற சீரியல்கள் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வரும் திங்கள் முதல் ராமன் தேடிய சீதை என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதனால், சீதா ராமன் என்ற புதிய சீரியல 2.30 மணிக்கும், மனசெல்லாம் சீரியல் 3 மணிக்கும், நானே வருவேன் சீரியல் 3.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதயம் ஜனனி விலகல்: இதயம் சீரியல் மூலம் பாரதியாக நடித்து பலரது இதயங்களை கவர்ந்த ஜனனி தற்போது அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அவரே அறிவித்து விட்டார். சின்னத்திரையில் அறிமுகம் ஆனாலும், வேற மாறி ஆப்பிஸ் தொடரிலும் நடிக்க தொடங்கினார். தற்போது வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். திரைப்பயணத்தி வழி அமைத்து கொடுத்த சின்னத்திரைக்கு விடை கொடுப்பதாக ஜனனி கூறியுள்ளார். இதயம் சீரியலில் இருந்து விலகுவதாக கூறியவர் தனது புதிய பயணத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இதற்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.