ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்துக்கு காரணம் நானா?: நடிகை திவ்யபாரதி விளக்கம்..

4 days ago
ARTICLE AD BOX
dhivyabharathi is not the reason and saindhavi divorced gv prakash

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவு தொடர்பாக, நடிகை திவ்யபாரதி கூறிய விளக்கம் பார்ப்போம்..

ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி விவாகரத்துக்கு காரணம் ‘பேச்சிலர்’ பட நடிகை திவ்யா பாரதி என கூறப்பட்டது. இந்த விஷயத்துக்கு, ஜி.வி. பிரகாஷ் தரப்பில் இருந்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாலும், தொடர்ந்து இசை நிகழ்ச்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டு வெளிநாட்டில் நடந்த ஜிவியின் ம்யூசிக் கான்சர்ட்டில், சைந்தவி தன் மகளுடன் பங்கேற்றார்.

இதை தொடர்ந்து இருவரும் மீண்டும் மனம் மாறி ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த விவாகரத்துக்கு காரணம் என கூறப்பட்ட, நடிகை திவ்ய பாரதியை விமர்சித்தும் வந்தனர்.

இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு திவ்யபாரதி வேதனையோடு கூறியதாவது: ‘ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி பிரிவுக்கு காரணம் நானா? உண்மையில் அவங்க இரண்டு பேரையும் ஜோடியாக பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆனால் ஒரு சிலர், அவர்கள் பிரிய காரணம் நான் தான் என நினைத்து என்னை திட்டினார்கள். குறிப்பாக, பல பெண்கள் என்னை திட்டி கமெண்ட் போட்டனர். அப்போது, என்ன பேசுவது என்று தெரியாமல் அந்த கமெண்ட்ஸை கடந்து போனேன் அப்படினு சொல்லியிருக்காங்க’ என்றார்.

இச்சூழலில், ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக ‘பேச்சிலர்’ படத்தில் நடித்த திவ்யபாரதி தற்போது மீண்டும் ஜி.வி.யோட 25-வது படமான ‘கிங்ஸ்டன்’ படத்திலும் ஹீரோயினா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhivyabharathi is not the reason and saindhavi divorced gv prakashdhivyabharathi is not the reason and saindhavi divorced gv prakash

The post ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்துக்கு காரணம் நானா?: நடிகை திவ்யபாரதி விளக்கம்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article