ஜார்க்கண்ட்: வெடிகுண்டு தாக்குதலில் காவலர் படுகாயம்!

9 hours ago
ARTICLE AD BOX

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவீன வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மேற்கு சிங்பம் மாவட்டத்தின் ராதா போதா கிராமத்தின் வனப்பகுதியில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் இன்று (மார்ச் 18) மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் என்பவர் அங்கு ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு நிறுவப்பட்டிருந்ததை அறியாமல் அதனை மிதித்துள்ளார். இதனால், தூண்டப்பட்ட அந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையும் படிக்க: நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்

இதனைத் தொடர்ந்து, அவர் விமானம் மூலம் ராஞ்சிக்கு அழைத்து சென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் நலமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வெடிகுண்டை அப்பகுதியிலுள்ள நக்சல்கள் நிறுவியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலும், இந்த நடவடிக்கையின் போது அந்த வனப்பகுதியிலிருந்த நக்சல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதற்கு வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article