ஜான்வி கபூரிடம் மட்டும் உள்ள அற்புதமான விஷயம் அது.. பிரபல நடிகர் உடைத்த ரகசியம்

2 days ago
ARTICLE AD BOX

ஜான்வி கபூர் 

தமிழ் சினிமாவில் 80களில் புகழின் உச்சத்தில் டாப் நாயகியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழை தாண்டி இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நாயகியாக வலம் வந்தார்.

ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும் போதே அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்க தொடங்கிவிட்டார். பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய ஜான்வி சமீபத்தில் தென்னிந்தியா படத்தில் நடிக்க தொடங்கினார்.

அதன்படி, ஜுனியர் என்டிஆருடன் தேவாரா படத்தில் நடித்திருந்தார். அடுத்து ராம் சரணுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

உடைத்த ரகசியம் 

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அர்ஷத் வர்சி ஜான்வி கபூரை பாராட்டி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "ஜான்வி அவரது அம்மா ஸ்ரீதேவி போன்று ஒரு சிறந்த நடிகை.

அவரிடம் இருந்த அந்த ஸ்பார்க் தற்போது இவரிடமும் உள்ளது. அதை வேறு யாரிடமும் காண முடியாது. ஜான்வி திரையில் வரும்போது அவரிடமிருந்து நம் கண்களை நகர்த்த முடியாது. அது ஒரு நடிகையிடம் இருக்க வேண்டிய அற்புதமான விஷயம்" என்று கூறியுள்ளார்.      

Read Entire Article