ஜம்மு காஷ்மீரில் 'முத்தையா முரளிதரனுக்கு ஒதுக்கப்பட்ட நிலம்': சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்?

4 hours ago
ARTICLE AD BOX

கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் கதுவா மாவட்டத்தில் ‘இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு நிலம் இலவசமாக ஒதுக்கப்பட்டது’ எனக் கூறி சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஜாவேத் அஹ்மத் தார், இந்த விவகாரம் குறித்து தனக்கு தெரியாது என்றும், அது குறித்து பரிசீலிப்பதாகவும் கூறினார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: What is the row around ‘land allotted to Muttiah Muralitharan’ in Jammu and Kashmir

 

Advertisment
Advertisements

முரளிதரனின் நிறுவனம் ஏற்கனவே சர்ச்சைக்குரிய நிலத்தை ஒப்படைத்துள்ளது - ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.1600 கோடி முதலீடு இழப்பு ஏற்படக்கூடும்.

முத்தையா முரளிதரனுக்கு நிலம் ஒதுக்கியதில் என்ன சர்ச்சை?

குல்காமில் இருந்து ஐந்து முறை சி.பி.ஐ.(எம்) எம்.எல்.ஏ-வாக இருந்த எம்.ஒய். தாரிகாமி, முரளிதரனின் பெயரை குறிப்பிடாமல் சட்டசபையில், "இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஜம்மு காஷ்மீரில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றும், "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (பி.எம்.ஏ) திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட உள்ளூர் மக்களுக்கு நிலம் கிடைக்காத நிலையில் இது எப்படி செய்யப்பட்டது?" என்றும் கேட்டார்.

அவருடன், மூன்று முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த தூரு ஜி.ஏ.மிர், ஜம்மு காஷ்மீரில் இந்திய கிரிக்கெட் வீரர் அல்லாத ஒருவருக்கு எப்படி நிலம் ஒதுக்கப்பட்டது என்று அரசாங்கத்திடம் கேட்டார். இது ஒரு "தீவிரமான பிரச்சனை" என்று கூறினார்.

இந்த இடம் கதுவா மாவட்டத்தின் பாக்தாலி தொழிற்பேட்டையில் உள்ளது.

ஜம்மு காஷ்மீர் தொழில்துறை நில ஒதுக்கீடு கொள்கை 2021-30ன் கீழ் நிலத்திற்கு யார் தகுதியானவர்?

குறிப்பிட்ட சட்டங்களின் நிலத்திற்கு தகுதியானவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்திய பார்ட்னர்ஷிப் சட்டம், 1932 அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை சட்டம், 2008 அல்லது கார்ப்பரேட் நிறுவனம் சட்டம் போன்றவற்றின் மூலம் குறிப்பிட்ட தனி நபர்கள் அல்லது குழுவினர் தகுதி உடையவர்களாக கருதப்படுகின்றனர். 

ஒரு தொழில் நிறுவனம்/அலகை நிறுவுவதற்கு நிலம் ஒதுக்கப்படும். மேலும், ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

முரளிதரனுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதா?

முத்தையா முரளிதரன் என்ற தனி நபருக்கு அல்லாமல் சிலோன் பீவரேஜஸ் நிறுவனத்திற்கு மொத்தம் 206 கனல்கள் (25.75 ஏக்கர்) நிலம், ஜம்மு காஷ்மீர் ஸ்டேட் இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (சிட்கோ) மூலம் ஜூன் 1, 2024 அன்று ஒதுக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மூன்று பேரில் முத்தையா முரளிதரனும் ஒருவர்.

சிலோன் பீவரேஜஸ், ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக 2023 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் உள்ள நிறுவனங்களின் பதிவாளரால் பதிவு செய்யப்பட்டது. மற்ற இரண்டு இயக்குநர்களான நித்யா ராமமூர்த்தி மற்றும் முத்தையா சசிதரன், ஆகியோரின் பெயர்கள் முறையே நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பட்டியலில் வரிசை எண் 1 மற்றும் 3 இல் உள்ளன.

நிலம் இலவசமாக வழங்கப்பட்டதா?

ரூ. 16.48 கோடியை முழுமையாக இந்நிறுவனம் செலுத்திய பின்னரே, ஜூன் 16, 2024 அன்று குத்தகைப் பத்திரத்தை சிட்கோ நிறுவனம் நிறைவேற்றியது.

இந்த நிறுவனம், அலுமினிய கேன்கள் மற்றும் பாலிஎதிலீன் டெரெப்தாலேட்களை பாட்டில்களில் நிரப்புவதற்கான ஒரு யூனிட்டை நிறுவ இருந்தது. 950 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு மற்றும் ரூ. 1642.75 கோடி முதலீடு நேரடியாக முன்மொழியப்பட்டது.

மார்ச் 15, 2024 அன்று உச்ச நிலை நில ஒதுக்கீடு குழு, தகுதிப் பட்டியலின் அடிப்படையில் நிலத்தை ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்தது. மேலும், ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்குமாறு பொதுவெளியில் அழைப்பு விடுக்கப்பட்டது

தகுதிப் பட்டியல் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது?

ஒரு கனலுக்கு முன்மொழியப்பட்ட முதலீட்டின் அடிப்படையில், ஒரு கனலுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ஆலையின் சாத்தியக்கூறுகளுடன் தகுதிப் பட்டியல் தீர்மானிக்கப்பட்டது.

பரிசோதிக்கப்பட்ட 22 விண்ணப்பதாரர்களில் சிலோன் பீவரேஜஸ், தகுதி வரிசையில் முதலிடம் பிடித்தது. ஒரு கானல் ஒன்றுக்கு ரூ. 7.975 கோடி முதலீடு மற்றும் கானல் ஒன்றுக்கு 4.612 பணியாளர்கள் வேலை வாய்ப்பை அது முன்மொழிகிறது. 

ஜம்மு காஷ்மீர் தொழில் கொள்கை என்றால் என்ன?

ஜம்மு - காஷ்மீரில் தொழில்துறையை மேம்படுத்தவும், வேலைகளை உருவாக்கவும், மொத்தம் ரூ. 28,400 கோடி செலவில் புதிய தொழில் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் மூலதன முதலீட்டில் மானியம், ஆலை மற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு ஜி.எஸ்.டி மற்றும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிதி நிறுவனங்களிடமிருந்து கடனாக செயல்படும் மூலதனம் போன்ற சலுகைகளை வழங்கியது.

இந்தச் சலுகைகளைப் பெற, தொழில் முனைவோர் முதலில் சிட்கோவிடமிருந்து நிலத்தை ஒதுக்கி, அதன்பின் தொழில்துறை பிரிவை அமைக்க வேண்டும். சுமார் 4.5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கில் இந்தக் கொள்கை மேற்கொள்ளப்பட்டது.

நிதிச் சலுகைகளுக்கு யாரெல்லாம், எப்போது இருந்து தகுதி பெற்றவர்கள்?

ஏப்ரல் 1, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு, நிலம் ஒதுக்கப்பட்ட பின்னர், தொழில்துறையில் பதிவு செய்த தொழில்முனைவோருக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும்.

ஊக்கத்தொகை அவர்கள் உற்பத்தியைத் தொடங்கிய நாளிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில் அவர்களுக்குச் செலுத்தப்படும்.

சிலோன் பீவரேஜஸ் நிறுவனத்திற்கு ஏதேனும் ஊக்கத்தொகை கிடைத்ததா?

இந்நிறுவனத்திற்கு ஊக்கத் தொகை கிடைக்கவில்லை. ஏனென்றால், ஜூலை 2024 இல் நிலம் ஒதுக்கப்பட்ட பிறகு, ஊக்கத்தொகைக்கு தகுதி பெறுவதற்கு நிறுவனம் தன்னைத் தொழில்துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது வெளிநாட்டு முதலீட்டை உள்ளடக்கியதால், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எஃப்.டி.ஐ மீதான வழிகாட்டுதல் கட்டமைப்பின் அடிப்படையில் முதலீடு, ஆர்.பி.ஐ மற்றும் டி.பி.ஐ.டி.ஐ மூலம் வர வேண்டும். இதற்கு நிறுவனத்திற்கு நேரம் எடுத்தது. மேலும், 971 தொழிற்துறை அலகுகள் பதிவு செய்யப்பட்டதன் மூலம் ரூ. 28,400 கோடி முற்றிலும் தீர்ந்து விட்டது.

சிலோன் பீவரேஜஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் நிலை என்ன?

யூனிட்டை பதிவு செய்வதற்கான விதிமுறைகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு, மார்ச் 6 அன்று இந்நிறுவனம், ஜம்மு காஷ்மீர் சிட்கோவிடம் நிலத்தை ஒப்படைத்தது.

ஜம்மு காஷ்மீர் தொழில்துறை நில ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, குத்தகைப் பத்திரத்தை நிறைவேற்றிய இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு ஒதுக்கீடுதாரர் நிலத்தை ஒப்படைத்தால், ஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டு, ஒதுக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட தொகையில் 80 சதவீதம் திருப்பித் தரப்படும்.

- Arun Sharma

Read Entire Article