ஜனவரி மாதம் 86.99 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம்

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த ஜனவரி மாதம் 86 லட்சத்து 99 ஆயிரத்து 344 பயணிகள் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக ஜனவரி 10-ந்தேதி அன்று 3 லட்சத்து 60 ஆயிரத்து 997 பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

இதில், பயண அட்டையை பயன்படுத்தி 23 லட்சத்து 78 ஆயிரத்து 989 பேர், டோக்கன் பயன்படுத்தி ஆயிரத்து 800 பேர், குழு பயணச்சீட்டு மூலம் 7 ஆயிரத்து 219 பேர், கியூ-ஆர் குறியீடு பயணச்சீட்டு மூலம் 37 லட்சத்து 80 ஆயிரத்து 386 பேரும் பயணித்துள்ளனர். சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 25 லட்சத்து 30 ஆயிரத்து 950 பேர் பயணம் செய்துள்ளனர். அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article