ARTICLE AD BOX

தளபதி விஜய்யின் 69-வது படம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என காண்போம்..
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ எனும் (அரசியல் பேசும்?) படத்தை எச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
மேலும் பாபி தியோல், மமிதா பைஜூ, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் ‘ஜன நாயகன்’ பட படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் பேட்டா கொடுக்க முடியாததால், ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பான் இந்தியா படங்களை தயாரிக்கும் அளவுக்கு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக கேவிஎன் நிறுவனம் இருந்தும், அவர்களால் சம்பளப் பாக்கி கொடுக்க முடியவில்லையா? என்றால் விஷயம் அதுவல்ல.
அண்மையில் இந்நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு. அதனால் அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் ஃபிரீஸ். அதனால் சம்பளப் பாக்கி….? இந்த விவகாரத்தால், அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் கடும் அப்செட்.
ஆனால், இப்படத்திற்காக விஜய்க்கு ரூ.275 கோடி சம்பளமும் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார் விஜய் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. அப்ப, பணியாளர்கள் சம்பளப் பாக்கி.. வரும்.. வெயிட்டிங்.?

The post ‘ஜனநாயகன்’ படத்தின் ஷூட்டிங் திடீர் ஸ்டாப்; விஜய் கடும் அப்செட்; நிகழ்ந்தது என்ன? appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.