ARTICLE AD BOX
சௌந்தர பாண்டியன் சதியை உடைத்த சண்முகம்.. பரணி எடுத்த முடிவு.. அண்ணா சீரியல்!
சென்னை: ஷண்முகம் பரணியிடம் பிரியாணி நல்லா இருந்ததா என்று கேட்க பூவை பிரியாணியோடவா கொண்டு வருவ என்று திட்டுகிறாள். மேலும் ஷண்முகம் அமெரிக்காவிற்கு போக கூடாதுனு ஐஸ் வைக்கத்தான் இப்படி எல்லாம் பண்றியா, என்ன நடந்தாலும் அமெரிக்கா போவேன் என்று உறுதி எடுக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம்.
இதையடுத்து, இன்றைய எபிசோடில், சண்முகம் வீட்டுக்கு வந்ததும் தங்கைகள் எல்லோரும் அவனை மடக்கி பிடித்து பரணி எதுக்கு அமெரிக்காவுக்கு அனுப்ப மாட்டுற என கேள்வி எழுப்புகின்றனர். சண்முகம் சௌந்தரபாண்டி இந்த குடும்பத்தை பிரிக்க நினைக்கும் சதியை பற்றி சொல்கிறான். ஆனால் இதைக் கேட்ட பரணி அவர் இந்த குடும்பத்தைப் பிடிக்க இன்னைக்கா திட்டம் போடுகிறார்? ஆரம்பத்திலிருந்து அதை தானே பண்ணிக்கிட்டு இருக்காரு என்று சொல்கிறாள்.

அண்ணா சீரியல்: பிறகு சண்முகம் ரூமுக்கு வந்து பிரியாணியும் மல்லிகை பூவும் வாங்கிட்டு வந்தேனே எப்படி இருந்தது என்று கேட்க பிரியாணி மல்லிகை பூ மாதிரி இருந்தது மல்லிகை பூ பிரியாணி மாதிரி இருந்தது என திட்டுகிறாள். சண்முகம் பரணியிடம் சத்தமாக பேச வைகுண்டம் சண்டை என நினைத்து ஓடி வந்து என் மருமகள் கிட்டயா சண்டை போடுற என சண்முகத்தை அடிக்க வர சண்முகம் அப்பா நான் சண்ட போடல என்று கோபித்துக் கொண்டு வெளியே செல்கிறான். அதன் பிறகு வைகுண்டம் பரணியிடம் நீ படிச்சி பெரிய ஆளா வர்றதுல எனக்கு சந்தோஷம் தான் மா.. ஆனா நீ இந்த குடும்பத்தை விட்டுட்டு வெளிநாடு போறது நினைக்காத கஷ்டமா இருக்கு. சூடாமணிக்கு பிறகு நீ தான் இந்த குடும்பத்தை நல்லபடியா கவனிச்சுக்கிட்ட என்று வருத்தப்பட்டு பேசுகிறார்.
வாரிசை பெற்று கொடு: இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வரும் பாக்கியம் நீ அமெரிக்காவுக்கு எல்லாம் போய் படிக்க வேண்டாம் உன்னை மெட்ராசுக்கு அனுப்பி படிக்க வச்சது நான் தான். இப்போ நான் சொல்றேன், நீ ஒழுங்கா புருஷன் ஓட வாழ்ந்து ஒரு வாரிசை பெற்று கொடு இப்போதைக்கு அது போதும். இங்க பாக்குறேன் வேலையையே பாரு என்று சொல்கிறாள். ஆனாலும் பரணி யார் சொன்னாலும் சரி நான் அமெரிக்கா போகத்தான் போறேன் என தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள். அடுத்த நாள் காலையில் ரத்னா அவசரமாக ஸ்கூலுக்கு போகணும் என்னை டிராப் பண்ணிடு என்று சொல்ல சண்முகம் முத்துப்பாண்டியுடன் போக சொல்ல ரத்னா நீங்க பரணியை கூட்டிட்டு போங்க நான் அண்ணனோட போறேன் என சண்முகத்துடன் கிளம்பி செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.