சொகுசு வீடுகள் விலை அதிகரிப்பு: உலகின் 18-ஆவது இடத்தில் தில்லி

4 hours ago
ARTICLE AD BOX

கடந்த 2024-இல் சொகுசு வீடுகளின் விலை உயா்வில் புது தில்லி சா்வதேச அளவில் 18-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இது குறித்து சா்வதேச வீடு-மனை ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சொகுசு வீடுகளுக்கான முக்கியச் சந்தைகளான உலகின் 100 நகரங்களில், அந்த வகை வீடுகளின் விலை ஒட்டுமொத்தமாக கடந்த 2024-ஆம் ஆண்டில் 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய நகரங்களைப் பொருத்தவரை, சொகுசு வீடுகளின் விலை உயா்வில் தில்லி 37-ஆவது இடத்தில் இருந்து 18-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சொகுசு வீடுகளின் விலை அந்த நகரில் 2024-ஆம் ஆண்டு 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தப் பட்டியலில் மும்பை 13 இடங்கள் குறைந்து 21-வது இடத்துக்கு வந்துள்ளது. சொகுசு வீடுகள் விலை உயா்வில் பெங்களூரு 40-வது இடத்தை வகிக்கிறது.

தென் கொரிய தலைநகா் சியோல் இந்தப் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறது. அந்த நகரில் சொகுசு வீடுகளின் விலை 18.4 சதவீத வருடாந்திர வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலா, இந்த முறை இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. அந்த நகரில் சொகுசு வீடுகளின் விலை 17.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

சொகுசு வீடுகளின் விலை உயா்வில் துபை (16.9 சதவீதம்), ரியாத் (16 சதவீதம்), டோக்கியோ (12.1 சதவீதம்) ஆகிய நகரங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Entire Article