சேலம் ஸ்பெஷல் ரெஸிபி...துவரம் பருப்பு வைத்து கமகமக்கும் ரசம்

4 days ago
ARTICLE AD BOX

சேலம் ஸ்பெஷல் அப்படினா தட்டுவடை செட் தான் கேள்வி பட்டு இருப்பீங்கள். ஆனால் இன்னொரு ஸ்பெஷல் உணவு பற்றி தெரியுமா? அப்படி சேலத்தில் மிகவும் ஸ்பெஷலாக உள்ள பருப்பு ரசத்தை உங்கள் வீடுகளில் எப்படி செய்வது என்று  ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,

Advertisment

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு  
தக்காளி 
பச்சை மிளகாய்  
இஞ்சி நறுக்கியது 
மஞ்சள்தூள்  
கல் உப்பு 
தண்ணீர்  
எலுமிச்சைபழச்சாறு
கொத்தமல்லி இலை 
நெய்  
உளுத்தம் பருப்பு  
கடலை பருப்பு  
கடுகு  
சீரகம்  
காய்ந்த மிளகாய் 
பெருங்காய தூள்  
கறிவேப்பிலை

செய்முறை

Advertisment
Advertisement

துவரம் பருப்பை குறைந்தது ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பிறகு பிரஷர் குக்கரில் ஊறவைத்த பருப்பு, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நான்கு விசில் வரும் வரை வேகவிடவும். தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து, அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும்.

துவரம் பருப்பு ரசம் | Thuvaram Paruppu Rasam Recipe In Tamil | Rasam Recipes |

கடுகு பொரிந்த பிறகு, அடுப்பை அணைத்து காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, பொரிந்ததும் ரசத்தில் சேர்த்துவிடவும். எலுமிச்சை பழச்சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து இறக்கினால் போதும் சுவையான துவரம் பருப்பு ரசம் ரெடியாகி விடும்.

Read Entire Article