செல்வத்தை குவிக்கும் மேஷம், ரிஷபம், மிதுனம்?.. வாழ்க்கையில் ஏற்படப் போகும் சூப்பர் மாற்றம்

2 days ago
ARTICLE AD BOX

செல்வத்தை குவிக்கும் மேஷம், ரிஷபம், மிதுனம்?.. வாழ்க்கையில் ஏற்படப் போகும் சூப்பர் மாற்றம்

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

Weekly rasi palan: 2025 மார்ச் 24 முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை மாசி மாதம் 12 ஆம் நாள் முதல் மாசி 18 வரை மேஷம், ரிஷபம், மிதுன ராசிக்காரர்களுக்கு என்ன விதமான நற்பலன்கள் கிடைக்கும், எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வாரத்தில் மிக முக்கிய தினமான மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. சிவபெருமானுக்குரிய தினமான மகா சிவாரத்திரி தினத்தன்று ஒரு கால பூஜையிலாவது அமர்ந்து மனதார வழிபடுவது ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்கும். பழங்கள், மலர்கள், வில்வ இலை, தாமரை என தங்களால் முடிந்தவற்றை சிவனுக்கு சாற்றி வழிபடுவது அற்புதமான பலன்களைத் தரும்.

மேஷம்: இழுபறியாக இருந்து வந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். பூமி சார்ந்த விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். வீடு வாங்குவது, விற்பது, பத்திரப் பதிவு செய்வது போன்றவை கைகூடி வரும். தொழில் ரீதியாக அனுகூலம் காணப்படும். வேலையில் மேலதிகாரிகளின் விஷயங்களில் நல்ல கெளரவம் ஏற்படும். புதிய பொறுப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் அற்புதமான ஏற்றம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் படிப்படியாகக் குறையும். நிறைய கூட்டாளிகள் கிடைப்பார்கள். பண வரவு உண்டாகும். பணத்தை சேமிப்பதற்கான விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.

அனைத்து விஷயங்களையும் திட்டமிட்டு ஓர் ஒழுங்காக கொண்டு செல்வீர்கள். ஏழரை சனி வர வர உங்களுடைய யுக்திகளை நீங்களே மாற்றுவீர்கள். துணைவியின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளுடன் பாராமுகமாக இருந்தவர்கள் அன்பாக நடந்து கொள்வீர்கள். நிறைய நண்பர்களை சந்திப்பீர்கள். பதட்டம், பயம் படிப்படியாகக் குறையும். இறைவன் பார்த்துக் கொள்வான் என்று நம்புவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லாம் உங்களை விட்டு விலகுவார்கள். வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. துர்கை, முருகர் வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு வயிறு, கழிவு, முதுகு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தொழில், உத்தியோகம், படிப்பு, வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள், பெற்றோர், குடும்பத்தில் சந்தோஷம் ஏற்றம் உண்டாகும். எதிரிகளால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அதனை தவிர்த்துவிட்டு கடந்து செல்வது நல்லது. படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர் பிரபலமடைவீர்கள். யோக காலமாக இருக்கும். தொழில்நுட்ப அனுகூலங்கள் ஏற்றத்தை தரும்.

பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு கடன் அமைப்புகள் கிடைக்கும். முதலீடுகள் வந்து சேரும். பதட்டம் போய் பட்டாம்பூச்சி பறக்கும் காலமாக இருக்கும். பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தனிப்பட்ட செல்வாக்கு உண்டாகும். ஏற்றம் பெறுவீர்கள். வியாபாரத்தில் காணப்பட்ட சிக்கல்கள் தீரும். யோகமும், அனுகூலமும் கூடக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

Weekly rasi palan lucky zodiac signs
மிதுன ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளுடன் கோப தாபம் கூடாது. படிப்பு, உத்தியோகம், தொழில், வேலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலர்ஜி, மூட்டு பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். குரு மாறுவதால் இடது பக்க தேக ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் அந்நியர் தலையீடு கூடாது. பிறர் குடும்ப விஷயத்தில் நீங்களும் தலையிடாமல் இருப்பது நல்லது. துணைவியார் விஷயத்தில் நிதானமாக செல்வது நல்லது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வேலையில் தொய்வாக இருந்தவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நல்லது நடக்கும். பெருமாள் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். அனுகூலமான அமைப்பு உண்டாகும். பெரியோர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பழைய கடன்களை தீர்ப்பது, வழக்கில் சாதகமான முடிவு போன்றவை சுமூகமாக முடியும். அனுகூல அமைப்பு உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு, உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். சனிக்கிழமை பசு மாட்டுக்கு அகத்துக்கீரை கொடுப்பது நல்ல பலன்களைத் தரும்.

More From
Prev
Next
English summary
From March 24 to March 2, 2025, from the 12th day of the month of Masi to the 18th of Masi, what kind of benefits will be available to the people of Aries, Taurus and Gemini, and what things should be taken care of in this astrology article.
Read Entire Article