செல்போன் இல்லை, யாருடைய தொடர்பும் இல்லை.. 3 நாள் ஈஷா யோகா மையத்தில் சமந்தா என்ன செய்தார்?

2 days ago
ARTICLE AD BOX

செல்போன் இல்லாமல், யாருடைய தொடர்பும் இல்லாமல் மூன்று நாள் தனிமையில் இருந்ததாக நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது, பாலிவுட்டில் ஒரு வெப் தொடரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் ஈஷா யோகா மையத்துக்கு சென்ற சமந்தா, அங்கு மூன்று நாட்கள் மௌன விரதத்தை கடைப்பிடித்ததாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். செல்போன் இல்லாமல், யாரிடத்திலும் பேசாமல், தனிமையாக மூன்று நாள் இருந்த அனுபவம் மிகவும் நல்லதாக இருந்ததாகவும், இது போன்ற விரதத்தை மீண்டும் கடைப்பிடிப்பேனா என்றால், கண்டிப்பாக கடைப்பிடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இதனை மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்வேன் என்றும் கூறியுள்ளார். மூன்று நாட்கள் எந்தவிதமான தகவல் தொடர்பும் இல்லாமல், முழுவதுமாக தியானத்தில் ஈடுபட்ட சமந்தாவின் செயலை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Read Entire Article