ARTICLE AD BOX
திருப்போரூர்: செம்பாக்கம் கிராமத்தில் உள்ள அழகு விநாயகருக்கு 4 லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது. திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமம் வடக்கு மாடவீதியில் அழகு விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து, 48 நாட்களாக மண்டலாபிஷேகம் நடைபெற்ற நிலையில், நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் அழகு விநாயகருக்கு 4 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து, 108 சங்காபிஷேகமும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, விநாயகரை வழிபட்டனர். மண்டலாபிஷேகம் முன்னிட்டு அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும், மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
The post செம்பாக்கம் அழகு விநாயகருக்கு 4 லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரம் appeared first on Dinakaran.