ARTICLE AD BOX
SEBI New Chief News: இந்திய பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியம் எனப்படும் செபி அமைப்பின் புதிய தலைவராக துகின் காந்த பாண்டேவை நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்பு தலைவராக இருந்த மாதபி பூரி புச்சின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. எனவே இந்த துகின் காந்த பாண்டே யார்? இவரின் பேக்ரவுண்ட் என்ன? இவருக்கு முன்னாடி இருக்கும் சேலஞ்சஸ் என்ன? துகின் காந்த பாண்டேவின் வின் வாழ்க்கை பயணம் குறித்து பார்ப்போம்.
மாதவி பூரி பூச் கடந்த மார்ச் 2022 ஆம் ஆண்டு செபி அமைப்பின் தலைவராக பதவி ஏற்கிறார். அதை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணியாற்றுகிறார். மார்ச் 1, 2025-ல் அவரோட பதவி காலமும் முடிவடைவதை தொடர்ந்து தான் செபிக்கு புதிய தலைவராக யாரை நியமிக்கிறது என்கிற கேள்வி எழுந்தது. அதனையடுத்து துகின் காந்த பாண்டே நியமிக்கிறோம் என மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து அறிவித்தார்கள்.
இந்த துகின் காந்த பாண்டே யாரு எனப்பார்த்தால், இவர் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். கடந்த 1987 ஒடிசா கேடர் இருந்து தேர்வாகி ஐஏஎஸ் அதிகாரியாக பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார். பொது நிறுவனங்கள் துறைகள் (DPE), மற்றும் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை (DIPAM) போன்ற முக்கிய துறைகளின் செயலாளராகப் பணியாற்றி வந்தார். DIPAM-ன் பொறுப்பில் நீண்ட காலம் பணியாற்றிய செயலாளர் பாண்டே ஆவார்.
ஒடிசா அரசு மற்றும் இந்திய அரசின் பல்வேறு துறைகளில் பல குறிப்பிடத்தக்க நிர்வாகப் பதவிகளை காந்த பாண்டே வகித்துள்ளார். ஒடிசா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஏர் இந்தியாவின் விற்பனையை வெற்றிகரமாக முடித்தது மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பொதுப் பட்டியலை மேற்பார்வையிட்டது போன்ற அவரது மகத்தான சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்படுகிறார்.
அதாவது இந்தியாவோட மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிஸ்டிங் மெயின்டைன் செய்ததில் இவரோட பங்கு ரொம்ப முக்கியமானதாக இருந்திருக்கிறது. அதுமட்டும் இல்லாம இந்தியாவோட தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாட்டா குடும்பத்துக்கு விற்பனை செய்வதில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்தது. அதை சுமுகமாக முடித்து வைத்ததில் இவரின் பங்கு ரொம்ப முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஆரம்பகாலத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றுவதற்கு முன்பு, சம்பல்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றினார். பின்னர் அவர் ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பின் (யுனிடோ) பிராந்திய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து அவர் திரும்பியதைத் தொடர்ந்து, பொது நிர்வாகத் துறையில் சிறப்புச் செயலாளர், போக்குவரத்து ஆணையர், சுகாதாரச் செயலாளர் மற்றும் வணிக வரி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார். 2009 ஆம் ஆண்டில், பாண்டே ஐந்து ஆண்டுகள் திட்டக் கமிஷனில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2021 ஆம் ஆண்டில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளராகவும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். தனது பணிக்காலம் முழுவதும், பாண்டே ஒடிசா அரசாங்கத்தின் நிதி விவகாரங்களை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார் மற்றும் பல ஆண்டுகளாக நிதி அமைச்சகத்துடன் நெருக்கமாக தொடர்புடையவர் ஆவார்.
இந்த சூழ்நிலையிலதான் இவர் செபி அமைப்பின் தலைவராக பொறுப்பேற்கிறார். செபியின் தலைவராக நியமிக்கப்பட்டதனால் அவருக்கு மாத சம்பளமா கிட்டத்தட்ட ₹5,62,500 வரைக்கும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதுபோக அவருக்கான வீடு, கார் உட்பட பல சலுகைகளும் கொடுக்கப்படும்.
செபியின் தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட துகின் காந்த பாண்டேவுக்கு பல சேலஞ்சஸ் இருப்பதை பார்க்க முடிகிறது. இனி இவர் எப்படி வொர்க் பண்ண போகிறார். இந்தியன் ஸ்டாக் மார்க்கெட்டில் என்ன மாதிரியான புது ரெகுலேஷன்ஸ் கொண்டு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ