சென்னையில் தான் எனது வாழ்க்கை தொடங்கியது - நடிகர் நாக சைதன்யா!

2 hours ago
ARTICLE AD BOX

ஆந்திரா, தெலுங்கானா மட்டுமில்லாமல் தமிழ்நாடு கேரளா கர்நாடகா வட இந்தியா முழுவதும் பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று வெளியாகும் நாக சைதன்யா - சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் 'தண்டேல்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மீனவ இளைஞனின் தேசபக்தி மிக்க உணர்வுபூர்வமான காதல் கதையை மையமாகக் கொண்ட இந்த 'தண்டேல்' படத்திற்கு, படக்குழுவினர் இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் தீவிரமாக விளம்பரப் படுத்தி வருகிறார்கள். இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் தண்டேல் எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சியாம் தத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் தயாரித்திருக்கிறார்.

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ்ஜின் அடுத்த பட ஹீரோ! ‘இந்த’ 41 வயது நடிகர்தான்..யார் தெரியுமா?

எதிர்வரும் ஏழாம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார், தமிழில் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வழங்குகிறார். படத்தைப் பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில் படத்தைப் பற்றி தனது அனுபவங்களை நாயகன் நாக சைதன்யா பகிர்ந்து கொள்கிறார்.

படம் குறித்து நாக சைதன்யா

சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலலானது.‌ என் வாழ்க்கை இங்கு தான் தொடங்கியது. சென்னையில் எனக்கு மறக்க முடியாத அனுபவம் நிறைய உள்ளது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் அனைத்து கமர்சியல் அம்சங்கள் இருந்தாலும் அடிப்படையில் இது ஒரு காதல் கதை. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தை பார்க்கும் ரசிகர்களும் இந்த காதலை நெருக்கமாக உணர்வார்கள். இந்த படத்தில் என் கதாபாத்திரத்தின் திரை தோற்றம் குறித்து இயக்குநர் சந்து என்னை சந்தித்தபோது விவரித்தார். அதைக் கேட்டவுடன் நடிகருக்கு தன் திறமையை வெளிப்படுத்துவதற்கான சரியான சந்தர்ப்பம் என நம்பினேன். படத்தின் கதையும் விசாகப்பட்டினத்தில் அருகே உள்ள ஸ்ரீ கா குளத்திலிருந்து பயணித்து, குஜராத்திற்கு சென்று, அங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று, அங்குள்ள சிறைக்கு சென்று, அதன் பிறகு சொந்த மண்ணுக்கு திரும்புவது போன்ற நீண்ட பயணம். இது என்னை மிகவும் கவர்ந்தது.

'தண்டேல்' படத்தில் நான் நடித்த ராஜு கதாபாத்திரம் என்னை பல விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மனிதனுடைய பரிணாம வளர்ச்சி தொடர்பான அத்தனை உணர்வுகளும் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது ஏற்பட்டது. மனிதர்களிடத்தில் பேரன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று என்பதையும் உணர்த்தியது. இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்கும்.  இந்தப் படத்தின் கதை. இந்த படத்தின் பட்ஜெட். இதன் பிரம்மாண்டம். தயாரிப்பின் தரம்.. எல்லாம் எனக்கும், இயக்குநருக்கும் புதிது. இதுவரை எந்த திரைப்படத்திலும் இல்லாதது. மிகப் பெரிது.‌  இது இயக்குநரின் வளர்ச்சியைத் தான் காட்டுகிறது.‌

சந்து எனக்காக நிறைய சிந்திப்பார். அவர் இந்த படத்தில் என்னை புதிய தோற்றத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார். காதல் காட்சியாகட்டும்... சண்டைக் காட்சியாகட்டும்... நடன காட்சியாகட்டும்.. சந்து எப்போது எனக்கு ஆதரவாகவே இருப்பார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிப்பை தவிர்த்து கார் பந்தயங்களில் ஈடுபாடு உண்டு. இதற்காக நான் சென்னைக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை இருங்காட்டு கோட்டையில் உள்ள கார் பந்தய மைதானத்தில் நடைபெறும் கார் பந்தயங்களை பார்வையிட்டிருக்கிறேன்.  ரசித்திருக்கிறேன். அது என்னுடைய பொழுதுபோக்கு மட்டும் தான். அதற்காக நான் முறையான பயிற்சியை எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் ஓய்வு கிடைக்கும் போது பந்தயக் கார்களை இயக்கிருக்கிறேன் என்றார்.

மேலும் படிக்க | கூலி: ரஜினிக்கு மகளாக நடிக்க இருந்த 31 வயது நடிகை! ஸ்ருதிஹாசன் இல்லை-வேறு யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article