ARTICLE AD BOX
சென்னை: சென்னையில் தமிழ்நாடு பட்ஜெட் நேரலை செய்யப்படவுள்ள 100 இடங்களின் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் வருகின்ற 14.03.2025 அன்று தாக்கல் செய்யப்படும். தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை. பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை. டைடல் பார்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில் 14.03.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படுகிறது. மேலும், 15.03.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையும் எல்.இ.டி. திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
*திருவொற்றியூர், ஒளிபரப்பப்படும் இடங்கள் அஜேக்ஸ் பேருந்து நிலையம்
*திருவொற்றியூர், ஒளிபரப்பப்படும் இடங்கள் வடிவுடையம்மன் கோயில் சன்னதி தெரு
*திருவொற்றியூர், ஒளிபரப்பப்படும் இடங்கள் சுனாமி குடியிருப்பு எம்.5 காவல்நிலையம்
*திருவொற்றியூர், ஒளிபரப்பப்படும் இடங்கள் திருவொற்றியூர் தேரடி மார்க்கெட்
*திருவொற்றியூர், காலடிப்பேட்டை மார்க்கெட்
*மணலி, மணலி புதுநகர், 10வது பிரதான சாலை
*மணலி, மாத்தூர் பூங்கா, எம்.எம்.டி.ஏ.2வது பிரதான சாலை
*மணலி, ஆண்டார் குப்பம், செங்குன்றம் நெடுஞ்சாலை சந்திப்பு
*மணலி, 21ஆவது-வார்டு அலுவலகம் பாடசாலை தெரு
*மணலி , உடற்பயிற்சிக் கூடம், தேவராஜன் தெரு
*மாதவரம், எம்.ஆர்.எச்.சாலை தட்டான்குளம் சாலை சந்திப்பு
*மாதவரம், பரப்பன்குளம் புதுபூங்கா
*மாதவரம், மூலக்கடை சந்திப்பு பாலம் கீழ்ப்புறம்
*மாதவரம் , ரெட்டேரி சந்திப்பு பாலம் கீழ்ப்புறம் லட்சுமிபுரம்
*மாதவரம், சி.எம்.டி.ஏ. பேருந்து நிலையம் (உள்புறம்)
*தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை மெட்ரோ அகஸ்திய திரையரங்கம் அருகில்
*தண்டையார்பேட்டை, அம்பேத்கர் கல்லூரி. எருக்கஞ்சேரி பிரதான சாலை
*தண்டையார்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலை வைத்தியநாதன் பாலம் சந்திப்பு
*தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகில்
*தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை கவிஞர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் அருகில்
*தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் எத்திராஜ் சாலை சந்திப்பு,எம்.ஆர்.நகர்
*இராயபுரம், மின்ட் பேருந்து நிலையம்
*இராயபுரம், எழும்பூர் பேருந்து நிலையம்
*இராயபுரம், சென்ட்ரல் இரயில் நிலையம்
*இராயபுரம், எழும்பூர் இரயில் நிலையம்
*இராயபுரம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
*இராயபுரம், ரிப்பன் கட்டடம்-அம்மா மாளிகை வளாகம்
*திரு.வி.க.நகர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கொளத்தூர்
*திரு.வி.க.நகர், மேயர் அலுவலகம், திரு.வி.க.நகர்
*திரு.வி.க.நகர், எஸ்2 மால், பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூர்
*திரு.வி.க.நகர், ஹரிதாஸ் குளம் பூங்கா
* திரு.வி.க.நகர், ஜவஹர் நகர் பூங்கா, 5வது பிரதான சாலை
*திரு.வி.க.நகர், பெரியார் நகர் பூங்கா, 20வது தெரு
*திரு.வி.க.நகர், முரசொலி மாறன் பூங்கா (வடக்கு), பெரம்பூர் பிரதான சாலை
* திரு.வி.க.நகர், முரசொலி மாறன் பூங்கா (தெற்கு) பெரம்பூர் பிரதான சாலை
*திரு.வி.க.நகர், நியூ ஃபெரன்ஸ் சாலை பூங்கா
* திரு.வி.க.நகர், பட்டேல் பூங்கா, செல்லப்பா தெரு
*திரு.வி.க.நகர், கான்ரான்ஸ்மித் பூங்கா, சி.எஸ்.நகர் பூங்கா தெரு
*திரு.வி.க.நகர், செல்வபதி பூங்கா, ஸ்ட்ராஹன்ஸ் சாலை
*திரு.வி.க.நகர், அம்மா பூங்கா.யானைக்கவுனி சாலை
*திரு.வி.க.நகர், கன்னிகாபுரம் பிரைட்டன்ஸ் சாலை விளையாட்டுத் திடல், புளியந்தோப்பு
*திரு.வி.க.நகர், 5ஆவது தெரு, பி பிளாக், கஸ்தூரிபாய் காலனி புளியந்தோப்பு
*திரு.வி.க.நகர், ஏ பிளாக், கஸ்தூரிபாய் காலனி, புளியந்தோப்பு
*திரு.வி.க.நகர்,முதல் குறுக்குத் தெரு.டாக்டர் அம்பேத்கர் நகர்
*அம்பத்தூர், பழைய எம்.டி.எச்.சாலை
*அம்பத்தூர், மங்கள் ஏரி பூங்கா
*அம்பத்தூர், தாமரைக் குளம் பூங்கா
*அம்பத்தூர்,திருமங்கலம் பிரதான சாலை
*அம்பத்தூர், எம் டி எச் ரோடு சரவணா ஸ்டோர் அருகில்
*அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிறுத்தம்
*அம்பத்தூர், தாங்கல் பூங்கா
*அம்பத்தூர்,டாடா கம்யூனிகேஷன் பூங்கா
*அம்பத்தூர், தாதங்குப்பம் 200 அடி தெரு
*அண்ணாநகர், புல்லா அவென்யூ, திரு.வி.க.நகர் பூங்கா
*அண்ணாநகர், அண்ணாநகர் டவர் பூங்கா
*அண்ணாநகர், வி.ஆர்.மால், ஜவஹர்லால் நேரு சாலை, அண்ணாநகர் மேற்கு
*அண்ணாநகர், ஸ்கைவால், இ.வி.ஆர். சாலை, அமைந்தகரை
*அண்ணாநகர், திருநகர், 13ஆவது பிளாக். 11ஆவது தெரு பூங்கா
*அண்ணாநகர், நேரு பூங்கா
*அண்ணாநகர், ஜி.பிளாக் பூங்கா
*அண்ணாநகர், ஸ்கேட்டிங் பூங்கா
*அண்ணாநகர் , சி.பிளாக் பூங்கா
*அண்ணாநகர், போகன்வில்லா பூங்கா
*அண்ணாநகர், ஏ.எல்.பிளாக் 14ஆவது பிரதான சாலை பூங்கா
*தேனாம்பேட்டை,மெரினா கடற்கரை-1
*தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை-2
*தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை 3
*தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம் அண்ணா சதுக்கம்
*தேனாம்பேட்டை, எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஒயிட்ஸ் சாலை, இராயபேட்டை
*தேனாம்பேட்டை, சிட்டி சென்டர், ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர்
*கோடம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையம்
*கோடம்பாக்கம்,ஜீவா பூங்கா
*கோடம்பாக்கம் , ஜெய் நகர் பூங்கா
*கோடம்பாக்கம்,சிவன் பூங்கா
*கோடம்பாக்கம்,ஃபோரம் மால், என்.எஸ்.கே. சாலை, வடபழனி
*கோடம்பாக்கம், பாண்டிபஜார் சாலை
*வளசரவாக்கம், பாரதி சாலை, நொளம்பூர்
* வளசரவாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை (நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையம்)
*வளசரவாக்கம், ஆற்காடு சாலை
*வளசரவாக்கம், உர்பேசர் லாரி நிலையம்
*வளசரவாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலை (RMZ அருகில்)
*வளசரவாக்கம், திருவள்ளூவர் சாலை, (காமராஜர் சாலை சந்திப்பு)
*ஆலந்தூர், முகலிவாக்கம் 156ஆவது வார்டு அலுவலகம் சந்திப்பு
*ஆலந்தூர், நங்கநல்லூர் 4ஆவது பிரதான சாலை (கோயில் குளம் அருகில்)
*ஆலந்தூர், கத்திப்பாரா பூங்கா
*ஆலந்தூர், சுதந்திர தினப் பூங்கா
*அடையாறு, பெசன்ட் நகர் கடற்கரை-1
*அடையாறு,பெசன்ட் நகர் கடற்கரை 2
*அடையாறு, கிராண்ட் மால் அருகில் சென்னை சில்க்ஸ்
*அடையாறு, திருவான்மியூர் கடற்கரை
*அடையாறு, பீனிக்ஸ் மால் வேளச்சேரி பிரதான சாலை, வேளச்சேரி
*அடையாறு, பி.வி.ஆர். கிராண்ட் மால், வேளச்சேரி பிரதான சாலை, வேளச்சேரி
*அடையாறு, விஜயநகர் பேருந்து நிலையம்
*அடையாறு, டைடல் பார்க் சந்திப்பு
*அடையாறு, கிண்டி பேருந்து நிலையம்
*பெருங்குடி,பாலவாக்கம் கடற்கரை
*பெருங்குடி, ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் பள்ளிக்கரணை வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலை,
*சோழிங்கநல்லூர், நீலாங்கரை கடற்கரை
*சோழிங்கநல்லூர், பி.எஸ்.ஆர்.மால், ரேடியல் சாலை, துரைப்பாக்கம்
*சோழிங்கநல்லூர், அக்கரை கடற்கரை
The post சென்னையில் தமிழ்நாடு பட்ஜெட் நேரலை செய்யப்படவுள்ள 100 இடங்களின் பட்டியல் வெளியீடு..!! appeared first on Dinakaran.