ARTICLE AD BOX
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர்.. பொறுப்பேற்பது எப்போது?

சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மையத்திற்கு முதன்முறையாக பெண் ஒருவர் தலைவராக பதவியேற்க உள்ளார். நாளை அவர் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் சென்னையில் உள்ள கிளையின் தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைவர் பாலச்சந்திரன் இன்று ஓய்வு பெற உள்ளதால், நாளை முதல் அமுதா தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இவர்தான் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமுதா கடந்த 34 ஆண்டுகளாக சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். அவர் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வருவதுடன், வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை பொறுப்பேற்க உள்ள அமுதாவிற்கு அவரது சக ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran