சென்னை | வளர்ப்பு நாயை வெளியே அழைத்துச் செல்பவரா நீங்கள்... இந்த தகவல் உங்களுக்குத்தான்!

16 hours ago
ARTICLE AD BOX
Published on: 
18 Mar 2025, 7:42 am

சென்னையில் வளர்ப்பு மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்களுக்கான விதிமுறைகளை மாநகராட்சி கடுமையாக்க உள்ளது..

நாய் வளர்ப்பவர்கள் தங்களது நாய்களை சாலையில் அழைத்துச் செல்லும் போது, நாய்களுக்கு வாய் மூடி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும், அதேபோல் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளரே பொறுப்பு இது போன்ற பல விதிமுறைகளை கடந்த ஆண்டு அறிவித்திருந்தது..

The Greater Chennai Corporation (GCC) has issued instructions for pet dog owners
ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்த கும்பல்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

ஆனால், வளர்ப்பு நாய் வைத்திருக்கும் பெரும்பாலானோர் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறப்படும் நிலையில், இது தொடர்பாக பல புகார்கள் மாநகராட்சிக்கு வந்துள்ளன. அதன் அடிப்படையில் விதிமுறைகளை கடுமையாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி வளர்ப்பு நாய்களை பொது வெளியில் அழைத்து வரும் உரிமையாளர்கள் தங்களது நாய்களுக்கு கட்டாயம் வாய்மூடி அணிந்து வர வேண்டும், இல்லையெனில் 1000 ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செயதுள்ளது.

Read Entire Article