சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2025-26! முக்கிய அறிவிப்புகள் இதோ!

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை மாநகராட்சியின் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மாநகராட்சி மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

* சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவித்து அதனடிப்படையில் குறிப்புகள் தயார் செய்யவும், வினாடி வினாப் போட்டிகள் நடத்திடவும், அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியரால், தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து வினாத்தாள்கள் தயாரித்து, தேர்வுகள் நடத்தப்படும். அவற்றில், வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மற்றும் மண்டலம் அளவிலான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், அக்குழுவில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இதனை மேற்கொள்ளும் வகையில் பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 15,000 முதல் ரூபாய் 75,000 வரை 211 பள்ளிகளுக்கு ரூபாய் 86.70 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

*  சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளிகளில் விருப்பத்துடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைக் கொண்டு, மண்டலம் வாரியாக "வளமிகு ஆசிரியர் குழு" (Pooling of Resource Teachers) அமைக்கப்படும். மேலும் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களைத் தேர்வு செய்து, அவர்கள் தடகளம் மற்றும் குழுப்போட்டிகளில் மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500 வீதம் மொத்தம் 62.55 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

* 50 சென்னை நடுநிலைப்பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள் ஒவ்வொன்றும் தலா ரூபாய் 60,000 என்ற அடிப்படையில் சமப்படுத்தி சீரமைக்கப்படும். 

* மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், இதற்கென உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திறன் மேம்பாட்டு பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினி பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* மண்டலம் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெறும் போது மாணவ மாணவியருக்கு பயன் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ₹500 விதம் வழங்கப்படும் 

* சென்னை நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை பங்கு பெறுபவர்கள் தலை ரூபாய் 2500 ரூபாய் மதிப்பிலான தரமான ஸ்போர்ட்ஸ் ஷூ வழங்கப்படும்

* சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.50 கோடியில் ஒரு புதிய கட்டிடம் கட்டப்படும்.

* பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து சுகாதார நிலையங்களில் உள்ள மருந்து காப்பாக அறைகளின் அளவுக்கு ஏற்ற வகையில் குளிரூட்டு வசதிகள் ரூ.3 கோடியில் செய்யப்படும்.

* பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 22 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்தூக்கி வசதிகள் ரூ.8 கோடியில் செய்யப்படும்.

*  பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மயான பூமிகளில் உள்ள தகன மேடைகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏதுவாக ஜெனரேட்டர்கள் ரூ.15 கோடியில் நிறுவப்படும். மேலும், இவற்றிற்கு தேவையான எரிபொருள் கொள்முதல் செய்வதுடன் தொடர் பராமரிப்பும் மேற்கொள்ளப்படும்.

*   தலைமையகம் மற்றும் 15 மண்டலங்களில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகள் மற்றும் படிவங்களை ஆவணப்படுத்தி, பாதுகாத்து பராமரிக்க, அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுடன் பிறப்பு மற்றும் இறப்பு பிரிவுகள் ரூ.5 கோடியில் ஆவண காப்பகமாக மேற்படுத்தப்படும்.

* ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதியோர்களுக்கு தனி நலப்பிரிவு அமைக்கப்படும்.

* பெருநகர சென்னை மாநகராட்சியில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கு மருந்து ரூ.3 கோடியில் செலவில் செலுத்தப்படும்.

*  மண்டலம் 10 கோட்டம் 141 கண்ணம்மா பேட்டையில் இயங்கி வரும் செல்லப்பிராணிகள் மருத்துவமனை வளாகத்தில் விபத்துகளினால் காயமடைந்த செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு அவசர சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

* வடசென்னையில் மூலக்கொத்தளம் மயான பூமியில் இறந்த செல்லப்பிராணிகளை அடக்கம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

*  சென்னை மாநகர பகுதியில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதிகளை அழகுற பயன்படுத்த திட்டம்.

*  சென்னை மாநகராட்சி பூங்காக்களில் சுய உதவிக் குழுக்களால் தரமான மற்றும் சுகாதாரமான உணவு மையங்கள் அமைக்கப்படும்

* பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெருநகர் சென்னை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 22 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின் தூக்கி வசதிகள் செய்யப்படும். 

*  பெருநகர சென்னை மாநகராட்சிக்கு, பொதுமக்கள் எளிய வழியில் வரி செலுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், தற்போது கூடுதலாக QR Code வசதி ஏற்படுத்தித் தருதல். சொத்து வரி மதிப்பீடு, பெயர் மாற்றம் திருத்தத்திற்கான இறுதி ஆணை அறிவிப்பு, புதிய மற்றும் புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள், தொழில் வரி வழங்கும் அறிவிப்புகளுக்கு புதிதாக QR Code வசதி ஏற்படுத்தப்படும். இதனால், எவ்வித சிரமும் இன்றி உடனடியாக வரிகளை செலுத்த இயலும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

* முக்கிய பேருந்து வழித்தடங்களை நிழற்குடை இல்லாத 200 எண்ணிக்கையிலான பேருந்து நிறுத்தத்தில் புதிதாக நிழல் குடைகளை அமைக்கப்படும்.

*  ஈக்காட்டுத்தாங்கல், மேற்கு சைதாப்பேட்டை மற்றும் கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை ஆகிய சாலைகளில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை மூலம் அமைக்கப்பட்டிருந்த பேருந்து நிறுத்தங்களை தரம் உயர்த்தி இழுவிசை கூரையாக மாற்றி அமைக்கப்படும்.

* சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெரிய அளவிலான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த 171 எண்ணிக்கையிலான விளையாட்டு திடல்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பாதுகாவலர்கள் பணியமற்றப்படுவார்கள்.

Read Entire Article