ARTICLE AD BOX
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ளனர். அதன்படி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மார்ச் 19-ந் தேதி ஆட்டோ, கால் டாக்சிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மெட்ராஸ் – செங்கல்பட்டு ஆட்டோ டிரைவர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் எம்.ராஜேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆட்டோ சங்கங்கள் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கையை கட்டண நிர்ணயக்குழு ஏற்றுக் கொண்டு கடந்த 2022 ஆம் ஆண்டு 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.50 கட்டணமும் அடுத்தடுத்த கிலோ மீட்டருக்கு ரூ.25 நிர்ணயிக்கப்பட்டு பரிந்துரை வழங்கியது என்று கூறியுள்ளார். ஆனால் ஓலா (Ola), ஊபர் (Uber) உள்ளிட்ட செயலிகள் சட்டவிரோதமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.76 வசூலித்து ஆட்டோ பயணிகளை கொள்ளையடிக்கின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், பொதுமக்களை கொள்ளையடிக்கும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி உடனடியாக ஆணையிடவும் அரசே ஒரு ஆட்டோ செயலியை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 19, 2025 அன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய (மார்ச் 19, 2025) தினம் சென்னையில் ஆட்டோ மற்றும் கால் டாக்சிகள் இயங்காது என்பதால் அனைத்து பகுதி மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி செல்லும்…! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!
The post சென்னை மக்களே அலர்ட்.. நாளை ஆட்டோ கால் டாக்ஸி இயங்காது..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.