சென்னை - புறநகர் ரயில் சேவை பாதிப்பு

4 hours ago
ARTICLE AD BOX

சென்னை சென்ட்ரலில் இருந்து புறநகர் ரயில் சேவை 45 நிமிடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கம் செல்லும் ரயில்கள் வராததால் பயணிகள் அதிகாரிகளுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல் – ஆவடி – திருவள்ளூர் வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Read Entire Article