“சென்னை நிருபர்கள் சங்க தேர்தலில் முறைகேடு..” மூத்த உறுப்பினர் சரமாரி குற்றச்சாட்டு

4 hours ago
ARTICLE AD BOX

“சென்னை நிருபர்கள் சங்க தேர்தலில் முறைகேடு..” மூத்த உறுப்பினர் சரமாரி குற்றச்சாட்டு

Chennai
lekhaka-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நிருபர்கள் சங்கம் (Madras Reporters Guild) நடத்தியதாக கூறப்படும் தேர்தல் கண்துடைப்பு என்றும், போலி உறுப்பினர்களை சேர்த்து நடத்தப்பட்டது எனவும் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் தரப்பில் முறையிடப்பட்டிருக்கிறது.

சங்கத்தின் மூத்த உறுப்பினர் தரப்பில் கூறுகையில், சென்னை நிருபர்கள் சங்கத்தின் (Madras Reporters Guild) தேர்தல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாமல் குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 1998 முதல் சென்னை நிரூபர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்படவில்லை, புதிய உறுப்பினர்களும் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் நிருபர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று செய்தியாளர்கள் தரப்பில் நிருபர்கள் சங்கத்தை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபர்களிடம் கேட்கப்பட்டது.

Chennai tamilnadu

இதையடுத்து, செய்தியாளர்கள் மற்றும் நிருபர்கள் சங்க தலைவர் என்று கூறிக்கொள்ளும் ரங்கராஜன், செயலாளர் டி.சேகர், துணை தலைவர் மோகன் ஆகியோர் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உறுப்பினர் படிவங்கள் பரிசீலனை ஆகியவற்றை மேற்கொள்ள குழுவை அமைக்க சம்மதித்தனர். அதன் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு உறுப்பினர் படிவங்களை ஆய்வு செய்து 476 விண்ணபபங்களை ஏற்றுக்கொண்டது. மீதமுள்ள சுமார் 100 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது.

இந்த நிலையில், எந்த ஆலோனையும் நடத்தாமல் ஜனவரி 20ம் தேதி நிருபர்கள் சங்கத்திற்கு தேர்தல் என்றும் ஜனவரி 7 முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் ஜனவரி 12ம் தேதி வேட்புமனு இறுதி செய்ப்படும் என்று ரங்கராஜன், சேகர்ஆகியோரால் விதிகளுக்கு முரணாக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை எதிர்த்து சங்கத்தின் மூத்த உறுப்பினர் வில்சன் ஆசீர்வாதம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தோடர்ந்தார்" என்று கூறியுள்ளனர்.

மூத்த உறுப்பினர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஜனவரி 20ம் தேதி நடைபெறும் என்று ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்பட்டது. எனவே, இந்த தேர்தல் செல்லாது என்று உத்தரவிட வேண்டும். உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்து நிருபர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடத்த உத்தரவிட. வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு 3வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி மோகனாம்பாள் முன்பு கடந்த ஜனவரி 7ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதில்தருமாறு ரங்கராஜன், சேகர், பன்னீர்செல்வம் மற்றும் நிருபர்கள் சங்கம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

வழக்கு ஜனவரி 10ம்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரங்கராஜன் தரப்பில் ஒருவரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, மனுதாரருக்கு சாதகமாக நீதிமன்றம் எக்ஸ்பார்டே உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கை தள்ளுபடி செய்க கோரியும் தேர்தல் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி மோகனாம்பாள் இரு தரப்பு மனுக்களுக்கும் இரு தரப்பும் பதில் தருமாறு உத்தரவிட்டார்.

வழக்கு மீண்டும் பிப்ரவரி 20ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கத்தின் பொதுச் செயலாளர் என று கூறி பாஸ்கர் என்பவர் பதில்மனு தாக்கல் செய்தார். அன்றைய தினம் நீதிபதி, இரு தரப்பு வாதத்திற்காக விசாரணையை பிப்ரவரி 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

வழக்கு பிப்ரவரி 26ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்த நபர் வழக்கில் சம்மந்தப்படாதவர். வழக்கு தொடரப்பட்ட போது அவர் சங்க உறுப்பினர் அல்ல. சங்க பொறுப்பிலும் இல்லை. இந்த தேர்தல் கண்துடைப்பு தேர்தல்தான். எக்ஸ்பார்டே உத்தரவை எதிர்த்து தேர்தல் அதிகாரி எப்படி மனு தாக்கல் செய்ய முடியும். மெட்ராஸ் ரிபோர்டர்ஸ் கில்டு அதாவது சென்னை நிருபர்கள் சங்கம் என்பது முழுவதும் நிருபர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால் சங்கத்தில் புகைப்படகாரர்களையும், தொலைக்காட்சி கேமராமேன்களையும் சேர்துள்ளனர்.

ஜனநாய ரீதியில் சங்கம் இயங்கவில்லை. 1998க்கு பிறகு சங்கத்தின் தேர்தல் நடத்தப்படாமல் எதிர் மனுதாரர்கள் அவர்களுக்குள்ளேயே பதவியை மாற்றிக்கொண்டுள்ளனர்.

கடந்த 2022ல் நிருபர்கள் சங்கம் சொசைட்டி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை. சங்கம் எப்படி இயங்குகிறது என்று எவருக்கும் தெரியாது. அதனால், மனுதாரர் மற்றும் நூற்றுக்கணக்கான நிருபர்கள் எதிர் மனுதாரர்களை அணுகி புதிய உறுப்பினர்களை சேர்க்குமாறு எதிர் மனுதாரர்களிடம் கேட்டனர்.

இதையடுத்து இரு தரப்பும் சம்மதம் தெரிவித்து டிசம்பர் 27ம் தேதி ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவும் புதிதாக வந்த 532 மனுக்களை பரிசீலனை செய்து அதில் 476 விண்ணப்பங்கள் உண்மையானவை என்று அறிவித்தனர். இந்த நிலையில் திடீரென்று தேர்தல் அறிவித்தார்கள். மனுதாரர் மட்டுமல்லாமல் 476 புதிய விண்ணப்பதாரர்களையும் உறுப்பனர்களாக சேர்க்கவில்லை.

மேலும், டிசம்பர் 27ம் தேதி அமைக்கப்பட்ட குழு ரத்து செய்யப்படுவதாக டிசம்பர் 20ம் தேதி அறிவிப்பதாக பொதுச்செயலாளர் சேகர் அறிவிப்பு வெளியிட்டார். இதிலிருந்தே சட்ட விரோதமாக எதிர் மனுதாரர்கள் செயல்பட்டது தெளிவாகிறது. இந்த நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது தேர்தல் நடந்ததாகவும் எதிர்ப்பே இல்லாமல் நிர்வாகிகள் தேர்த்தெடுக்கப்பட்டதாக அறிவித்தனர்.

இந்த தேர்தல் செல்லாது. போலியான தேர்தல் ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்பட்டது. தேர்தல் நடந்துவிட்டது எனவே இந்த வழக்கு செல்லாது என்று கூறுவது இந்த வழக்கு பொருந்தாது. இதற்கு உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தேர்தல் வெறும் கண்துடைப்பாகும்.
நிருபர்கள் சங்கத்தில் உள்ள அறைகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு வசூலித்துள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாக இதற்கு எந்த கணக்கும் இல்லை. தற்போது சென்னை நிருபர்கள் சங்க கட்டிடம் ஆர்டிஓ கட்டுப்பாட்டில் உள்ளது. ஆர்டிஓ விசாரணையும் நடந்துள்ளது. எனவே, சென்னை நிருபர்கள் சங்கத்தின் தேர்தல் அறிவிப்பு செல்லாது என்று உத்தரவிட வேண்டும், சட்ட விரோதமாக நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முரளி குமரன் வாதத்திற்காக விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

More From
Prev
Next
English summary
The election conducted by the Madras Reporters Guild has been alleged to be a sham, with claims that it was conducted using fake members. A senior member of the guild has filed a petition regarding this matter in the Chennai City Civil Court.
Read Entire Article