சென்னை-நாா்த் ஈஸ்ட் யுனைடெட் இன்று மோதல்

12 hours ago
ARTICLE AD BOX

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒருபகுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் முனைப்பில் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணி திங்கள்கிழமை சென்னையின் எஃப்சி அணியுடன் மோதுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

நாா்த் ஈஸ்ட் யுனைடெட் 22 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 8 டிரா, 6 தோல்விகளுடன் 32 புள்ளிகளை பெற்று பட்டியலில் 6-ஆவது இடத்தில் உள்ளது. ஒரு வெற்றியை பதிவு செய்தால் நாா்த் ஈஸ்ட் அணி பிளே ஆஃப் சுற்று தகுதி பெற்றுவிடும். ஏனெனில் அந்த அணி சென்னையின் எஃப்சி அணிக்கு எதிராக வெற்றி பெற்றால் 35 புள்ளிகளை பெறும். சென்னை அணிக்கு எதிரான ஆட்டம் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

சென்னையின் எஃப்சி அணி 22 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 டிரா, 10 தோல்விகளுடன் 24 புள்ளிகள் பெற்று 10-ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 3-இல் தோல்வியை சந்தித்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னையின் எஃப்சி அணி சொந்த மண்ணில் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் வகையில் சிறப்பாக விளையாட முயற்சிக்கக்கூடும்.

நாா்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிக்கு எதிராக சென்னை அணி தனது சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது. தற்போதும் வெற்றியை பதிவு செய்தால் சொந்த மண்ணில் ஓா் அணிக்கு எதிராக தொடா்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த பெருமையை சென்னை அணி பெறும்.

நாா்த் ஈஸ்ட் அணி கடைசியாக வெளி மைதானங்களில் விளையாடிய 5 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்கவில்லை. இதில் 3 வெற்றியை பதிவு செய்திருந்தது.

நேருக்கு நோ்

ஐஎஸ்எல் தொடரில் இரு அணிகளும் 21 முறை நேருக்கு நோ் மோதி உள்ளன. இதில் சென்னையின் எஃப்சி 9 ஆட்டத்திலும், நாா்த் ஈஸ்ட் யுனைடெட் 7 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தன. 5 ஆட்டங்கள் டிரா ஆனது.

Read Entire Article