ARTICLE AD BOX
சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் இன்று (பிப். 27) இரவு 2 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இன்று (பிப். 27) இரவு 2 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து
இரவு 10.20 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 40087, மற்றும் தாம்பரத்தில் இருந்து இரவு 10. 45க்கு புறப்படும் வண்டி எண் 40096 ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று 10 புறநகர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயில்களான வண்டி எண்: 40569, மற்றும் 40571 ஆகிய இரு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் வண்டி எண்கள்: 40089, 40091, 40093 ஆகிய மூன்று ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.