ARTICLE AD BOX
இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் டிராக் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது. ஹைப்பர்லூப் ரயில் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு அரை மணி நேரத்தில் சென்றடைய முடியும்.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக இருக்கிறது. தொலைதூரம் பயணிக்க வசதியாகவும், கட்டணம் குறைவாகவும் இருப்பதால் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் சாதாரண ரயில்கள் மட்டுமின்றி வந்தே பாரத், தேஜாஸ், சதாப்தி உள்பட அதிவிரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
அதிவேகமாக செல்லும் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் நாட்டின் பல்வேறு இடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயின் அடையாளமாக மாறியுள்ளது. இந்நிலையில், வந்தே பாரத், புல்லட் ரயில்களை விட அதிவேகமாக செல்லக்கடிய ஹைப்பர்லூப் ரயில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பய்ட உள்ளது.

நாட்டின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை இப்போது முழுமையாக தயாராக இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமையுடன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் சோதனைப் பாதை 410 மீட்டர் நீளம் கொண்டது. ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு இந்திய ரயில்வேயிடமிருந்து நிதி உதவி கிடைத்துள்ளது.
ரயில்வே துறை மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் இணைந்து இந்தப் பாதையை உருவாக்கியுள்ளனர். சென்னை ஐஐடி குழு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனமான TuTr ஹைப்பர்லூப் ஆகியவை இணைந்து நாட்டின் அதிவேக ரயில் பாதையை உருவாக்க உள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா மக்களின் கவனத்துக்கு..! இந்த 2 ரயில் நிலையங்களின் பெயர் மாற்றம்!

ஹைப்பர்லூப் என்றால் என்ன?
ஹைப்பர்லூப் என்பது ஒரு எதிர்கால தொழில்நுட்பமாகும். இதில் ஒரு ரயில் ஒரு சிறப்பு வெற்றிடக் குழாயின் உள்ளே அதிவேகத்தில் பயணிக்கிறது. இந்த தொழில்நுட்பம் பயணிகளுக்கு வேகமான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை உறுதியளிக்கிறது. இந்த ஹைப்பர்லூப் அமைப்பில், ரயில்கள் மணிக்கு 1,100 கிமீ என மின்னல் வேகத்தில் இயங்கும். புல்லட் ரயில்களின் வேகம் மணிக்கு 450 கிமீ ஆக இருக்கும் நிலையில், ந்த ஹைப்பர்லூப் ரயில்கள் அதைவிட வேகமாகும்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம், பயணிகள் தங்கள் பயணத்தை வெறும் 30 நிமிடங்களில் முடிக்க முடியும். அதாவது இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டால், சென்னை டூ பெங்களூரு மற்றும் சென்னை டூ திருச்சிக்கு வெறும் 30 நிமிடங்கள் அதாவது அரை மணி நேரத்தில் செல்ல முடியும். ஹைப்பர்லூப் பாதையின் பாதை ஓட்டம் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது. சோதனைகள் வெற்றியடைந்தால், இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் இந்தியாவில் பெரிய அளவில் செயல்படுத்தப்படலாம்.
இந்தியாவில் ஹைப்பர்லூப் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், ரயில்வே மற்றும் சாலைப் பயணத்தின் முழு அமைப்பும் ஒரு பெரிய மாற்றத்தைக் காணும். இந்த தொழில்நுட்பம் வேகமானது மட்டுமல்ல, அதிக ஆற்றல் திறன் கொண்டது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. எதிர்காலத்தில், ஹைப்பர்லூப் இந்திய பயணிகளுக்கு வேகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தின் கனவை யதார்த்தமாக மாற்றக்கூடும்.
Bengaluru Weather: பெங்களூருவாசிகளே! வெயில் கொளுத்தப்போகுது ! வெளியே போயிடாதீங்க!