சென்னை கே.கே.நகரில் எரிந்த நிலையில் ஐடி ஊழியர் சடலம்! திருவண்ணாமலை இளைஞருக்கு என்ன ஆனது?

4 hours ago
ARTICLE AD BOX

சென்னை கே.கே.நகரில் எரிந்த நிலையில் ஐடி ஊழியர் சடலம்! திருவண்ணாமலை இளைஞருக்கு என்ன ஆனது?

Chennai
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஐடி ஊழியர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பது குறித்து கே.கே. நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் நேதாஜி (34). இவர் ஐடி ஊழியர், கே.கே.நகரில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அவரது வீட்டில் இருந்து அளவுக்கு அதிகமான புகை வந்தது.

crime Chennai

இதை அவருடைய அக்கம்பக்கத்து வீட்டினர் பார்த்து அதிர்ச்சியடைந்து கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீஸார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு எரிந்த நிலையில் ஐடி ஊழியர் சடலமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேதாஜியின் மரணம் தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
English summary
Chennai IT employee's dead body rescued in K.K.Nagar in half burnt condition.
Read Entire Article