ARTICLE AD BOX
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
திருமுல்லைவாயில் கமலம் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் விநாயகம் (72). மாற்றுத் திறனாளியான இவரது மனைவி தனலட்சுமி (60). இந்நிலையில், வீட்டில் இருந்த விநாயகம் தனது ,மனைவியிடம் இரவு உணவு கேட்டுள்ளார். அப்போது உணவை மனைவி தனலட்சுமி தாமதமாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றியுள்ளது. இதையடுத்து விநாயகம், தனலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார். இதையடுத்து. பணி முடிந்து வீட்டிற்கு வந்த அவர்களது மகன் தங்க கணபதி, தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார், தனலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விநாயகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.