ARTICLE AD BOX
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை ஆகிய துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ 62,80 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் போலி பணி நியமன ஆணைகளை கொடுத்து ஏமாற்றியதாக டில்லிகுமார் மற்றும் மகேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அறித்துள்ளனர்.
கைதுகோப்புப்படம்
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு - வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீசார், புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மைலாப்பூர் பகுதியைச் சேர் த டில்லிகுமார் (60), கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (34) ஆகிய இருவரை கைது செய்து விசாரணைக்கு பிறகு சிறையில் அடைத்தனர்.