ARTICLE AD BOX
மும்பை: அமெரிக்க சந்தையின் பலவீனமான போக்கு, தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி மற்றும் கட்டணங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் அதானி கிரீன் எனர்ஜி, அப்பல்லோ டயர்ஸ், பாரத் ஃபோர்ஜ், டிஷ் டிவி, ஜிஎம்எம் பௌட்லர், ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ், லேடன்ட் வியூ, நாட்கோ பார்மா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா மோட்டார்ஸ், வக்ராஞ்சி மற்றும் வேர்ல்பூல் ஆகிய பங்குகள் இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தின் போது 52 வார குறைந்த விலையை எட்டியது.
பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ், செரா சானிட்டரிவேர், ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், ஜேகே பேப்பர், மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ், என்சிசி, ரத்னமணி மெட்டல்ஸ் & டியூப்ஸ், ரிலாக்ஸோ ஃபுட்வியர்ஸ், சன் டிவி, டாடா எல்க்ஸி மற்றும் டிம்கென் இந்தியா உள்ளிட்ட பங்குகள் அதன் ஓராண்டின் மிகக் குறைந்த விலையை எட்டியது.
சாதகமற்ற உலகளாவிய காரணிகளாலும், வர்த்தக மோதல் குறித்த கவலைகள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வருவதால், இந்திய பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் தொடர்ந்து ஐந்தாவது அமர்வாக இன்று 856.65 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது முடிந்தது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 857 புள்ளிகள் குறைந்து 74,454.41 ஆகவும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 243 புள்ளிகள் சரிந்து 22,553.35-ஆகவும் முடிந்தது.
நிஃப்டி ஐடி குறியீடு 2.83% வீழ்ச்சியடைந்ததும், இன்போசிஸ் 2.87%, டிசிஎஸ் 3.04% மற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 3.38% குறைந்தது. இந்த ஆண்டில் நிஃப்டி ஐடி குறியீடு 9% சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், நிஃப்டி மெட்டல் குறியீடும் பெரும் பின்னடைவை எதிர்கொண்டு 2.27% சரிந்தது.
முதலீட்டாளர்கள் லாபத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதால், நிஃப்டி மிட்-கேப் குறியீடு 0.94% வீழ்ச்சியடைந்த நிலையில் நிஃப்டி ஸ்மால் கேப் குறியீடு 1.14% வீழ்ச்சியடைந்தது.
இது குறித்து ஜியோஜித் நிதி சேவைகளின் ஆராய்ச்சித் தலைவர் வினோத் நாயர் தெரிவித்ததாவது:
உலகளாவிய சவால்கள் இன்னும் உள்நாட்டு சந்தையை பாதிக்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள வேளையில், தற்போதைய ஏற்ற இறக்கம் சில்லறை முதலீட்டாளர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி உள்ளது.
அமெரிக்காவில் பலவீனமான நுகர்வோர் உணர்வும் மற்றும் கட்டணங்கள் குறித்த கவலைகள் ஆகியற்றால் தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏற்றுமதியை நம்பியிருக்கும் துறைகளை இது மேலும் பாதிக்கும்.
முன்னோக்கிப் பார்க்கும் போது, அதிகரித்து வரும் அரசு செலவினங்கள், குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் மற்றும் வரி குறைப்பு ஆகியவற்றால், வருவாய் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிற வேளையில், இது எஃப்எம்சிஜி, நுகர்வோர் மற்றும் வங்கி ஆகிய துறைகளுக்கு பயனளிக்கும்.
இதையும் படிக்க: கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி!