செட்டிநாடு முருங்கைக்காய் மட்டன் மசாலா ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... தெருவே மணக்கும்...!

4 hours ago
ARTICLE AD BOX

செட்டிநாடு முருங்கைக்காய் மட்டன் மசாலா ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... தெருவே மணக்கும்...!

Recipes
oi-Saran Raj
Published: Saturday, March 15, 2025, 21:40 [IST]

Mutton Drumstick Masala Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் பொதுவாக சண்டே என்றாலே அசைவ உணவுதான். சிக்கன் என்னதான் விலை குறைவாகவும், சுவை அதிகமாக இருந்தாலும் மட்டன் சாப்பிடுவது என்பது எப்போதும் தனித்துவமான அனுபவம்தான். அசைவ உணவு சமைக்கும் போது அதனுடன் மசாலாப் பொருட்களை சேர்ப்போமே தவிர காய்கறிகளை பெரும்பாலும் தவிர்த்து விடுவோம். ஆனால் சில காய்கறிகளை மட்டனுடன் சேர்த்து சமைப்பது அதன் சுவையை பலமடங்கு அதிகரிக்கும்.

அப்படிப்பட்ட ஒரு அற்புத காய்கறிதான் முருங்கைக்காய். காரைக்குடி பகுதிகளில் மட்டனுடன் முருங்கைக்காயை சேர்த்து ஒரு குழம்பு செய்வார்கள். இது மிகவும் தனித்துவமான சுவையுடன் இருக்கும். அதனால்தான் செட்டிநாடு உணவுகள் மிகவும் பிரபலமானவையாக உள்ளது. உங்கள் சண்டேவை அருமையானதாக மாற்றும் இந்த முருங்கைக்காய் மட்டன் மசாலாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Mutton Drumstick Masala Recipe How to Prepare Drumstick Mutton Masala
தேவையானப் பொருட்கள்:

- முருங்கைக்காய் - 2
- பெரிய வெங்காயம் - 2
- கிராம்பு - 2
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- பட்டை - 1 துண்டு
- தேங்காய்த் துருவல் - ½ கப்
- சோம்பு - அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- கசகசா - ஒரு டீஸ்பூன்
- வர மிளகாய் - 10
- மல்லி விதை - 2 டீஸ்பூன்
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- மிளகு - ஒரு டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லித் தழை - சிறிதளவு

செய்முறை:

- முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து க் கொள்ளவும். அதேபோல முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

- தேங்காயை துருவி சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

- வர மிளகாய், தனியா, சீரகம், கசகசா, மிளகு, சோம்பு,பட்டை,கிராம்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

- அடுப்பில் குக்கரை வைத்து மட்டனைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மட்டனை தேவையான அளவு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

- வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மசாலா பச்சை வாசனை போனதும் வேக வைத்த மட்டன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

- பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

- முருங்கைககாய் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

- மட்டனுடன் மசாலா கலவை நன்கு சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி இறக்கி சூடாகப் பரிமாறினால் சுவையான முருங்கைக்காய் மட்டன் மசாலா ரெடி!

- இது இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.

English summary

Mutton Drumstick Masala Recipe: How to Prepare Drumstick Mutton Masala

Mutton Drumstick Masala Recipe in Tamil: Want to know how to make a Mutton Drumstick Masala Recipe at home easily? Read on to know more...
Story first published: Saturday, March 15, 2025, 21:40 [IST]
-->
Story first published: Saturday, March 15, 2025, 21:40 [IST]
Read Entire Article
LEFT SIDEBAR AD

Hidden in mobile, Best for skyscrapers.