ARTICLE AD BOX
மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருவதாகவும் அதை ஏதோ மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு போன்று விஜய் சித்தரிப்பதாகவும், விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுநர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார்.
தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் திமுக மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- தவெக-வின் 2ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசும், திமுகவும் எல்கேஜி பசங்களை போல விளையாடுகின்றனர் என விமர்சித்துள்ளார். எல்கேஜி பசங்களை போல அவர்கள் விளையாடுவதாக சொல்லிவிட்டு விஜய் பிரீகேஜி பசங்களை போல ஒரு அரசியல் செய்து கொண்டிருக்கிறார். மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. அதை ஏதோ மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு போன்று விஜய் சித்தரிக்கிறார். பின்னர் அது மோதல் போக்கே உண்மை இல்லை நாடகமாடுகிறார்கள் என்று சொல்கிறார்.
மத்திய அரசு அப்பட்டமாக தமிழகத்திற்கு திராக நடந்துகொள்கிறது என்று எல்லோருக்கும் தெரிகிறது. மாநில அரசு எதாவது வீம்புக்கு சண்டையிடுகிறதா? மாநில அரசு சண்டை போடுவது போல நடிக்கிறதா? என்றால் இல்லை. மத்திய அமைச்சர் புதியக் கல்விக்கொள்கை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவேன் என்கிறார். மாநில அரசு போய் அப்படி கையெழுத்து போட்டுவிட்டு 2 ஆயிரம் கோடியை வாங்கி கொண்டு போகலாம் தானே?. ஏற்றுக்கொள்வது என்பது முந்தைய அதிமுக ஆட்சியில் உதய், ஜிஎஸ்டி போன்றவற்றை ஏற்றுக்கொண்டது ஆகும். இங்கே மத்திய அரசை எதிர்த்து கொண்டிருக்கிறார்கள்.
மிகவும் முக்கியத்துவம் வய்ந்த பிரச்சினைகளை விஜயால் மட்டும்தான் காமெடியாக மாற்ற முடியும். தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அவர் எந்த கட்சி பெயரையும் சொல்லவில்லை. எந்த மொழி பெயரையும் சொல்லவில்லை. அவர் இதைத்தான் சொல்கிறார் என்று நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலை இவ்வளவு கேலிக்கூத்தாக மாற்றக்கூடாது. மிகவும் முக்கியமான பிரச்சினைகள் போய் கொண்டிருக்கிறது. மத்திய அரசு மாநில அரசின் மீது தாக்குதலை நடத்துகிறது. மாநில அரசு அதற்கு எதிர்வினை ஆற்றுகிறது. உங்களது 2000 கோடிக்காக 2000 ஆண்டுகள் இந்த மண்ணை பின்னோக்கி தள்ள தயாராக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுகிறார். எடப்பாடி போன்று சமரசம் செய்துகொண்டு அந்த நிதியை வாங்க தெரியும். நிதிச்சுமை இருந்தபோதும் அதனை மாநில அரசு ஏற்றுக்கொண்டு மாநில அரசு மல்லுக்கட்டுகிறது.
தமிழ்நாட்டின் கொள்கை இருமொழி கொள்கைதான் என்றும் முதலமைச்சர் அறிவித்துவிட்டார். இந்தி திணிப்பிற்கு எதிராக யார் தார் பூசி அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தவெக தொண்டர்களா? அல்லது திமுக கூட்டணியினரா? தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை யாருமே மேடை ஏற்றி கூட்டணி கட்சி தலைவர் போல காட்டியது கிடையாது. இப்போது விசிக கங்கிரசுடன் மேடையில் ஏறுகிறது என்றால், அது விசிகவின் கூட்டணி கட்சி என்பதால்தான். தவெகவின் முதல் கையெழுத்து இயத்திலேயே பிரசாந்த் கிஷோர் கையெழுத்து இட மறுக்கிறார். அப்போது, ஏராளமான தடுமாற்றங்களை விஜய் விவகாரத்தில் காண முடிகிறது.
விஜயின் பேச்சை அண்ணாமலை எதிர்க்கத்தான் செய்கிறார். ஆனால் எது உண்மையான எதிர் அரசியல் என்று பார்க்க வேண்டும். திமுக கூட்டணி முன்வைக்கிற அரசியல்தான் உண்மையான பாஜகவுக்கு நேர் எதிரான கள அரசியசியல். எவ்வளவு சீரிசாக பிரச்சினை போய்க் கொண்டிருக்கும்போது இவர்கள் டிவிட்டரில் சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள் என்று விஜய் சொல்கிறார். அதை கேலி செய்துவிட்டு நம்ம பசங்களும் சென்று சம்பவம் செய்துவிட்டனர் என்கிறார். அப்போது இவரும் டிவிட்டரில் தான் சண்டை போட்டுள்ளார். களத்தில் என்ன சண்டை நடக்கிறதோ அது சமூகவலைதளங்களிலும் நடைபெறும். சமுக ஊடகங்கள் இன்று கள அரசியலை உலகிற்கு வெளிக்காட்டுகிற ஒரு இடமாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களே எல்லாவற்றையும் தீர்மானிப்பது இல்லை. களச்சண்டைதான் அதை தீர்மானிக்கிறது.
பாஜகவுக்கு எதிர்ப்பை பேசுவது தான் இங்கே அரசியல் லாபமாக திமுகவுக்கு இருக்கும். அதனால்தான் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து பேசுகிறார்கள் என்கிறார் விஜய். இந்த அஜெண்டாவை மத்திய அரசு எடுத்துக்கொண்டு வருகிறது. இதில் தொகுதிகளை மாற்றப் போகிறார்களா? இல்லையா? அதில் நமக்கு பிரச்சினையா? இல்லையா? எந்த எண்ணிக்கையில் வந்தாலும் நாம் எதிர்க்க வேண்டுமா? இல்லையா?. ஜனநாயக வழியில் அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்பதற்காக தான் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டடியுள்ளார். பாஜக தெளிவாக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். இந்த மாதிரியான விஷயத்தை கொண்டுவருவதற்கு முன்பாக இதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திவிட்டனர். நாடாளுமன்றத்தை பெரிதாக கட்டி சீட் எல்லாம் போட்டுவிட்டனர். மக்கள் தொகை அடிப்படையில் தான் தொகுதி வரையறை செய்கிறார்கள். அப்படி செய்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பா? இல்லையா? குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ஏற்று செயல்படுத்தியதற்காக தண்டிக்கப்படுமா? இல்லையா? பாஜக செய்வதை உற்றுநோக்கி அதன் பித்தலாட்டங்களை, எதிர்வினை ஆற்றுகிறோமே தவிர, அவர்களுடன் பேசி வைத்துக்கொண்டு அரசியல் செய்யவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.